Headlines

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை ; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியவர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையொன்றை அவரமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட்…

Read More

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் பாதை அபிவிருத்தி

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் ம.நு.ப. பிரதேச செயலகத்திற்குரிய கொட்டியாவ சந்தியிலிருந்து துலாவெலி சந்தி வரையான 03 K.M சேதமடைந்த பாதை புனரமைப்புப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிற்குப் பதிலாக கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.R.M. தாரிக் அவர்கள் ஆரம்பித்து வைக்கும் போது

Read More

ஒரே நாளில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் அமைச்சர் ரிஷாட் முன்னிலையில் இன்று கைச்சாத்து

ஊடகப்பிரிவு இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையி;ல் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று காலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. கம்பனி பதிவாளர் திணைக்களத்திற்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இந்தத் தொகையை கம்பனி பதிவாளர் திணைக்களம், வரியிறுப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் கம்பனி பதிவாளர் நிதியத்திடமிருந்து பெற்று வழங்குகின்றது….

Read More

புத்தளம் என்பது குப்பை மேடல்ல..!!!பாராளுமன்றத்தில் அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி..

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 28 ம் திகதி நடந்த விசேட விவாதத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் உரையாற்றிய போது… “இந்த சந்தர்ப்பத்தை எனக்களித்தமைக்கு நன்றி… முதற்கன் மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தமது உறவினர்களை இழந்த இன்னலுறும் அவர்களது குடுப்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன்.. குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இங்கு பேசிய அனைத்து எதிர்…

Read More

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னாள் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். மன்னார் தாராபுரத்தில் சிறந்த கல்விக்குடும்பத்தில் பிறந்த அவர், நீண்ட காலம் நல்லாசிரியராகவும் திறமை மிக்க அதிபராகவும் பணியாற்றியவர். அவரது தந்தையார் ஒரு புலவர் ஆவார். . எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒருவராக அவர் இருந்தார். தந்தையைப்போல எனது அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்குபவராகவும் உற்சாகம் அளிப்பவராகவும் இருந்து அந்தப் பணிகளில் என்னுடன் இணைந்து செயற்படுபவராகவும்…

Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள் அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென அவர்களுக்கு தேவையான பொருட்களை அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்களும் சதொசவில்…

Read More

மன்னாரிலும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கங்களில் நேற்று இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கு உதவும் நடமாடும் சேவையைத்தொடர்ந்து இன்று காலை (2017.05.29) மன்னாரிலும் நடமாடும் சேவை இடம்பெற்றது.  தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான இந்த விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (29) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் தலைவர்களும்…

Read More

இயற்கை அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் சுகநலத்திற்காகவும் மரணித்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். புனித நோன்பு மாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்…

Read More

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இச் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்தியமாகான சபை உருப்பினர்களான லாபீர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தாரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினைக்கு தீர்வுக்காக நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் தலைமையிலான குழுவினர்.

  தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபை தலைவர் பௌசி, இணைப்பாளர் ரசாக் நளீமி, நீனகேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவர் அடங்கலாக இன்று பிற்பகல் நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்து இப்பிரதேசத்தில் இருக்கும் காணி முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டதுமாகவும் காணப்படுவதோடு காணிக்கான உறுதிப்பத்திரம் உட்பட உரிமத்துவதுக்கான சகல ஆவணங்களும் எமது சகோதரர்களிடம் காணப்படுவதையும் காண்பித்து விகராதிபதிக்கு…

Read More

அரசியல், இன வேறுபாடுகளுக்கப்பால் நடமாடும் சேவை முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   மக்களின் காலடிக்கு வந்து, தமது அமைச்சின் கீழான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின்; உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.   கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, நெடா, புடவைக்கைத்தொழில் நிறுவனம,; தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் இன்னோரன்ன…

Read More

வவுனியாவில் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (28) பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜயதிலக்க…

Read More