Headlines

ரூபா 1500 பெறுமதியான பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை. லங்கா சதொச நிறுவனம் நுகர்வோருக்கு சலுகை

ஊடகப்பிரிவு புத்தாண்டையொட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து சதொச நிலையங்களிலும் ரூபா 1500 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று ரூபா 975 இற்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நுகர்வோரின் நன்மை கருதி புத்தாண்டு சலுகையாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனால் அக்கரைப்பற்று நகரில் திறந்து வைக்கப்பட்ட லங்கா சதொசயின் புதிய கிளை

கடந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த சதோச விற்பனை நிலையங்களை நான் இதற்குப் பொறுப்பானஅமைச்சினைப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது இலாபம் ஈட்டுகின்ற நிறுவனமாக அதனைமாற்றியமைத்திருக்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும்வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்று நகரில் நிறுவப்பட்டுள்ள லங்கா சதோச விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று(09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத்…

Read More

அதிகாரம் இருந்தும் தம்புள்ளை பிரச்சினையை தீர்க்கமுடியாதவர்களிடம் மறிச்சிக்கட்டி பிரச்சினைக்கு உதவுமாறு கெஞ்சிருப்பேனா? அம்பாறையில் அமைச்சர் றிஷாட் கேள்வி…

(சுஜப் எம் காசிம்) நூறு நாள் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சை தமது கையில் வைத்துகொண்டிருந்தே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையையும் கிராண்ட்பாஸ் பள்ளி பிரச்சினையையும் தீர்க்க முடியாதவர்களால் எவ்வாறு மறிச்சிக்கட்டி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார். அம்பாறை நற்பிட்டிமுனையில் லங்கா சதொச நிறுவனத்தின் கிளையை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது, மர்ஹூம் அஸ்ரபின் மறைவின்பின்னர்…

Read More