புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட நவவி MP
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் அண்மையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கண்டறிவதனை குறிக்கோளாக கொண்டதாக இவ்விஜயம் அமைந்திருந்தது. இவ்வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் ரத்தனாயக்க மற்றும் வைத்தியர்கள் உடனான மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இங்கு நடைபெற்றதுடன், வைத்தியசாலை வளாகம், கட்டிட வேலைகள் நடைபெறும்…
