Headlines

செப்பனிடப்பட்ட , ஆனைவிழுந்தான் – திபிரிவெவ பாதை திறந்துவைப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைய விவசாய அமைச்சினால் செப்பனிடப்பட்ட ஹொரவபொதான, ஆனைவிழுந்தான் தொடக்கம் திபிரிவெவ வரையான பாதை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும்போது.

Read More

றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் கட்சிக்காரியாலயத்தில் தற்போது (06.02.2017) மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கும் மக்கள் 3 மணிக்கு முன்னர் காரியாலயத்திற்கு வருகை தந்து கலந்துகொள்ள முடியும்.

Read More

மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் இல்ல விளையாட்டு நிகழ்வு

இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” இல்ல விளையாட்டு என்பது வெறும்…

Read More

அ/அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் ஆலோசனை

அ / அங்குநொச்சிய மஹா வித்தியாலயத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான், பெற்றார்கள் மற்றும்  ஆசிரியர்களுடனான ஆலோசனையில் அண்மையில் ஈடுபட்டார்.

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற 69 வது சுதந்திர தின விழா

69 வது சுதந்திர தின விழா மிக விமர்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ் அணி நடை வகுப்பு ,விசேட அதிரடிப் படை அணி நடை வகுப்பு, மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அணி நடை வகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Read More

ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானியயா ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடம்

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஹொரவபொதான, மாவத்தாவ ரப்பானிய ஜும்மாப் பள்ளி மற்றும் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

Read More

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்திற்கு பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய த்திற்கு கடந்த 02.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலி  விஜயம் செய்தார். வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் தேவநாயகம் அவர்களின் வேண்டுக்கினங்க கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பாடசாலைக்கு சென்று அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து எதிர்காலத்தில் என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்து தருவதாக குறிப்பிட்டார். இவ்விஜயத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம சேவையாளர் அருள் ராஜ், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து…

Read More

ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கு பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் நிதி வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து ஹொரவபொதான, அங்குநொச்சிய ஹுதா ஜும்மாப் பள்ளிக்கான கட்டட நிர்மாணப்பணிகளிற்காக அண்மையில்  ஐந்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.

Read More

புத்தளம் வேப்பமடு அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் வேப்பமடு அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம்  (3)  கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

சிறைகளில் வாடிக்கிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பேதமின்றி அணி திரள்வோம் முல்லைத்தீவு சுதந்திர தின விழாவில் றிஷாட் அறை கூவல்!!1

சுஐப் எம் காசிம். இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில,; அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது சின்னஞ்சிறிய அழகான இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது…

Read More

முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (4) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொலிஸ், இராணுவம், கடற்படை, வான் படைகளும் அவற்றின் உயர் அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள்…

Read More

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கலந்துரையாடினார். மேலும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read More