Headlines

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வித்தியா வழக்கு!

புங்குடுதீவில் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோநாதன் வித்தியா மீதான படுகொலை வழக்கு தொடர்பில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம். றியால் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை பன்னிரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,…

Read More

அமெரிக்காவின் நிறுவனம் இலங்கைக்கு உதவி

அமெரிக்காவின் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது. MCC நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று (Loews Regency) ஹோட்டலில் சந்தித்தார். 2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள MCC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும்…

Read More

17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்

இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை,  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு…

Read More

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

ஹிருணிகாவுக்கு பிணை!

தெமட்டகொட பகுதியில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானதென கூறப்படும் டிபென்டர் வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Read More

பாரத லக்ஷ்மன் கொலை: தீர்ப்புக்கெதிராக மூவர் மேன்முறையீடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுவை முன்வைப்பதற்காக தமது சட்டத்தரணிகள் ஊடாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தமது மனுவை ஒப்படைத்துள்ளனர். அநுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே…

Read More

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அரச வைத்திய அதிகாரிகளுக்கு சூரியன் சந்திரனை எம்மால் வழங்க முடியாது!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சாதாரண மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றது. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. சுயலாபத்துக்காக அவர்கள் கோரும் சூரியனையும்  சந்திரனையும்  எம்மால் வழங்கமுடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சுக்கள் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிடும் நேரத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த வாரம் கல்வி அமைச்சுக் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இரவு முழுவதும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

Read More

சோகமயமான கல்குடா – தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் ஆயிரக்காணக்கான பொது மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றன. நேற்று முன்தினம் கல்குடா கடலில் குளிக்கச்சென்று நேற்று காணாமற்போன, 18 மற்றும் 21 வயதான சகோதரர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்நிலையில், கடலில் மூழ்கி பிள்ளைகள் இருவர் உயிரிழக்க, அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை…

Read More

இந்த வயரைக் கடித்து தான் தற்கொலை செய்துகொண்டாரா ராம்குமார்?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் முறைப்படு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் ராம்குமாரின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சிறையில் சுவரினுள்…

Read More

“மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம்” – அமைச்சர் தயா கமகே

ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அல்லாஹ்வின் அருள் வளம்

– ஜெஸிலா பானு – அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர். குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு…

Read More