Headlines

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் லலித், குகன் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்ம்புக்வெல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இதனையடுத்து லலித், குகன் ஆகியோரின் உறவினர்களால்…

Read More

சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை (4) காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

வெளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­புக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம்

யுத்­தக்­குற்­ற­ச்சாட்­டுகள் மற்றும் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் அமை­வான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு வேண்­டி­­யதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பங்­க­ளிப்பு வழங்­காது. இவ்­வி­டயம் தொடர்பில் எமது நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­றங்­களும் கிடை­யாது என ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிர­தி­நி­தியும் அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். இவ்­வார இறு­தியில் ஜக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்­கான விஜ­யத்தை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ்…

Read More

உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை

தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…

Read More

இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம்…

Read More

சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்

அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…

Read More

ட்ரம்பை வென்றார் டெட் குருஸ்

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்­கான வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்­க­டித்து  டெட் குருஸ் வெற்றி பெற்­றுள்ளார். அமெ­ரிக்­காவின் அயோவா பகு­தியில் நேற்று முன்­தினம் வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதில் குருஸ் 27.7 சத­வீத வாக்­கு­க­ளையும், டிரம்ப் 24.3 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றனர். அவர்­க­ளுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சத­வீத வாக்­குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்­துள்ளார். இதனால் டெட் குரூஸை குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விப்­பதில் எவ்­வித சிக்­கலும்…

Read More

பெப்.6இல் வருகிறார் ஹுஸைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், எதிர்வரும் சனிக்கிழமை (06) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சிறுவனின் சடலம் மீட்பு: சிறுவன் கைது

திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில்  இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.   இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More