மைத்திரி – மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு
மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயாரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளான். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் – 6 இல் கல்வி கற்கும் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மல்லிக ஆராச்சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறுவனே மின்சாரம் தாக்கி பலியானவனாவான்.
அரசன் அரசனைப் போல் உணவருந்த வேண்டும். ஜனாதிபதி தன் சிறப்புரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதைவிடுத்து கிராம சேவகரைப் போல் செயல்படக்கூடாது என என்னை விமர்சித்துள்ளார். ஆனால், நான் இதற்கு தயாரில்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து என்ற பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக சென்ற 72 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் கடும் வரட்சியால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மலையகத் தின் நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தில் 25 சதவீதம் வரை நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது டன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. காசல்றீ, மவுசாகலை மற்றும்…
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது எனவும் அந்த அனைத்து குற்றங்களையும் மஹிந்த ராஜபக்ஸ தனித்து செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அப்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவும்அதற்கான பொறுப்பினை…
தெற்காசியாவின் இலங்கை, மாலை தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்று வந்த முக்கோண போதைப் பொருள் வலையமைப்பொன்றின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்துக்கு வெளியே வைத்து நேற்று 3 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நான்கு மாலைத் தீவு பிரஜைகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த முகோண வலையமைப்பின்…
மலையகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக காணப்பட்ட கடும் வெப்பநிலையையடுத்து பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் இன்று மழை பெய்துள்ளமையால் சந்தோசமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பொது இடத்தில் மதுபானம் அருந்தவேண்டாம் என கூறிய பொலிஸ் அதிகாரி ஒரவரின் அந்தரங்க உறுப்பை கடித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொஸ்கொட, துவேமோதரவில் பொது இடத்தில் இருவர் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். இதை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்தே மதுபோதையில் இருந்த இருவரும் சேர்ந்து, பொலிஸ் உத்தியோகஸ்தரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர்,…
அழகிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்றுவது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையில் அமையப்போகின்றது. முழு உலகமே அனல் மின் நிலையத்திட்டத்தை கைவிடுகையில் இலங்கை மாத்திரம் அதனை ஆதரிப்பதையிட்டு சர்வதேசம் வியப்படைந்துள்ளது. எவ்வாறாயினும் உத்தேச அனல் மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்து இலங்கை மக்களுக்கும் இயற்கைக்கும் அழிவைத்தர போகின்றது என சூழலியளாலர் கலாநிதி எப். ரணில் சேனாநாயக்க தெரிவித்தார். சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வீரகேசரி…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை பஷில் ராஜபக் ஷ, கோதாபய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்கித்தள்ளியதோடு தம்மை முதன்மைப்படுத்தினர். இறுதியில் இதற்கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.