Headlines

புத்தளத்திலுள்ள 08 பாடசாலைகளுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – நவவி

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார். “புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும்…

Read More

பாடசாலை வகுப்பறை நிர்மாணப்பணிக்காக நிதி ஒதுக்கீடு

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழா (வீடியோ)

கடந்த 17.10.2016 காவத்தமுனை பிரதேசத்தில் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்ட வீடியோ பதிவு…..

Read More

தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், இன்று (20) கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

சிராஸ் மீராசாஹிப் (லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக) இன்று பதவியேற்பு

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை இன்று (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்பு – 02, கொம்பனித் தொரு, சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.

Read More

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள் – ரீட்டாவிடம் அமைச்சர் றிஷாத்

அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச்சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக்…

Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுடன் அமைச்சர் றிஷாத் கலந்துரையாடியபோது…

இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மன்னார் தாராபுரம் அல்/மினா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களை அமைச்சர் றிஷாத் சந்தித்துக் கலந்துரையாடியபோது…

Read More

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருனாகரன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஜனாப் , முன்னாள்…

Read More

புத்தளத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான வருடாந்த கலைவிழா

புத்தளத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான வருடாந்த கலைவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (18), புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளத்தில் இயங்கிவரும் விஷேட தேவையுள்ள குழந்தைகளின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி மையம், புத்தளம் பிரதேச செயலகம், நகரசபை மற்றும் புத்தளம் பிரதேசத்திக்குட்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிணைவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘எனக்கு ஆட ஆசை’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களும், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி,புத்தளம் பிரதேச…

Read More

ஹொரவபொதான, அல்-அக்ரம் முதியோர் அமைப்பிற்கு உதவி

பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் ஹொரவபொதான பிரதேச செயலகத்திற்குறிய நிகவெவ அல் அக்ரம் முதியோர் அமைப்பிற்கு இரும்பு அலுமாரி வழங்கியபோது.

Read More

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை: அமைச்சர் றிஷாத்தினால் திறந்துவைப்பு!  

கம்பளையில் இயங்கி வரும் மினாரா பூட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் அலுவலகத் தொகுதியை உலப்பனை கைத்தொழில் பேட்டையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். நிறுவனத்துக்கென தனியான இணையத்தளம் ஒன்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார். 2010 ஆம் ஆண்டு கம்பளை, மலபார் வீதியில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட இந்த நிறுவனம், இன்று அதனை விரிவாக்கிக்கொண்டு, உற்பத்தித் துறையில் தன்னிகரற்ற ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. கைத்தொழில், வர்த்தக அமைச்சின்…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா

காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற முப்பெரும் விழாவில்  பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீரான் ஹாஜி, புகாரி ஹாஜி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியாளர் சசிநத்தன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலத்தின் அதிபர் பிர்தௌஸ்,…

Read More