மூன்று பொலிஸார் பணி நீக்கம்
மாத்தளை – லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சில ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை – லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சில ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 கைத்துப்பாக்கிகளும் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியும், 26 வயதுடைய தாயொருவரும் என்று தெரிய வந்துள்ளது. சிலாபம் முன்னேஷ்வரம் கோயிலிற்கு தமது குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில் கடலில் நீராடச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் இருவருடைய உடல்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு,சடலம் தற்போது…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதிவேக வீதியை பயன்படுத்த முற்பட்ட பயணிகளினால் தெற்கு அதிவேக வீதியின் அருகாமையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையால் அவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு பிரதான நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் நன்மை கருதி தூரசேவை பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாதம்பை, ஊரலிய பகுதியொன்றில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வீட்டிற்கு முன்பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,நேற்றிரவு 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட போது பட்டாசு சத்தம் என்று எண்ணி அது தொடர்பில் தாம் பொருட்படுத்தவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் மூன்று…
மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பணியில் ஈடுப்பட்டு இருந்த 4 பொலிஸாரை வைத்திய பரிசோதணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெறும் வேளையில் பணியில் இருந்த நால்வரும் மது பயன்படுத்தி இருந்தனரா என்று கண்டுபிடிக்கவே பரிசோதணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், துப்பாக்கிகளை திருடிச்சென்றவர் அணிந்திருந்த ஆடைகளின் நிறமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள பதில் பொலிஸ்…
தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக நாட்டினுள் மலேரியா பரவுதல் முழுமையாகக் கட்டுப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று உத்தியோகவபூர்வமாகத் தெரிவித்தார். அமைச்சு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் பயனாக 2012 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டினுள் எவரும் மலேரியா நோய்க்கு உள்ளாகவில்லை என்று- சுட்டிக்காட்டிய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, எம்மைச் சூழவுள்ள நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் மலேரியாத் தொற்றுக்கு உள்ளாகி நாடு திரும்புபவர்கள்…
”கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்,” என, மலேஷிய மூத்த அதிகாரி அப்துல்லா இஷாக் கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, மலேஷியாவில், போதைப்பொருள் புலனாய்வு துறை தலைவர் அப்துல்லா இஷாக், கோலாலம்பூரில் நேற்று கூறியதாவது, மலேஷியாவில், கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிடுவது குற்றம். இதற்கு, சிறைத் தண்டனை விதிக்க, சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கசகசா சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டது தெரியவந்தால், அந்த நபரின் சிறுநீர் சோதிக்கப்படும். போதைப்பொருள் இருப்பதாக, சோதனை முடிவில் தெரிய…
கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.