Headlines

கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், மற்றும் விரிவாக்கற் கற்கைள் நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவித்தலில், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் தற்போது மீண்டும் 11.06.2016 இலிருந்து தொடர்ந்து நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் அனைவரும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளுக்கு சமூகம் கொடுக்குமாறு…

Read More

‘அர்ஜூன மீண்டும் வேண்டாம்’

ஜூன் மாதம் நிறைவடையவுள்ள, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனின் பதவிகாலத்தை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் அவர் ,தனைக் கூறியுள்ளார்.

Read More

இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த பலஸ்தீன் இளைஞர்களின் தாக்குதல்

நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான ‪தெல்லபீபில்‬ ‪இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு‬ மற்றும் முக்கிய ‪இராணுவ_தலைமையகம்‬ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது . மேலும் அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி கூறுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பாலஸ்தீனர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் .அவர்களில் ஒருவர் ‪ஷஹீதாக்கப்பட்டுள்ளதாகவும்‬ மற்றொருவர் ‪#‎கைது‬ செய்யப்பட்டுள்ளார் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது ….

Read More

நல்­லாட்­சியில் இன­வா­தம் – ஜனா­தி­பதி + பிர­தமர் முன் முஜிபுர் ரஹ்மான் துணிகரப் பேச்சு

இன­வா­தத்தை தோற்­க­டித்து கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற நாம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனவாத செயற்­பா­டுகள் குறித்து பல வாக்­கு­று­தி­களை வழங்­கினோம். அவை நிறை­வேற்­றப்­பட வேண்டுடிய தேவை தற்போது எழுந்துள்ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்தார். ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் கடந்த திங்கட் கிழமை இரவு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இடம்­பெற்­றது. இதன்­போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர்…

Read More

13 அமைச்சர்கள் சீனா பயணம்.!

பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இவர்கள் சீனா செல்கின்றனர். இந்த குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்  அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள்

சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச் செய்கையாளர்களுக்கே 8 இலட்சம் மானியத் தொகை வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த உற்பத்தியாளர்களுக்கு 8 இலட்சம் மானிய தொகையானது ஒருவருடத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காலி மாவட்டத்தில் சிறிய நில உரிமையாளர்கள் 600பேருக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

இன்றும் நாடு பூராகவும் மழை

நாட்டில் மேல், வட, தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மத்திய மாகாணத்தில் அடைமழை பெய்யக்கூடுமெனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் நண்பகல் 2 மணிக்கு பின் மழைபெய்யக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு பூராகவுமுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும், இதனால் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடலை அண்டி வாழ்போர் விழிப்புடன் இருக்குமாரும் வளிமண்டலவியல் திணைக்களம்…

Read More

எம்.பிக்களின் வாகனங்களுக்கான நிதியை கொடுக்கவேண்டாம்: பிரதமர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, சாலாவ புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையிலும் வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

Read More

புதிய வாகனங்களை மூன்று பிரதியமைச்சர்கள் நிராகரிப்பு

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள் மூவர், தங்களுக்கு அந்த வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரே, தங்களுக்கு புதிய வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளதுடன், புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதியையும் வேண்டாமென நிராகரித்துள்ளனர். தற்போது தன்னிடமுள்ள வாகனம் சிறந்த நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,…

Read More

மனித இனத்தை காப்பாற்றப் போகும் நுளம்புகள்!

ஸிக்கா வைரஸிடமிருந்து மனித இனத்தை காப்பாற்றப் போவது, பல நோய்களை பரப்பும் நுளம்புகள் என ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் ஸிக்கா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸிற்கு எதிரான போரட்டத்தில் நுளம்புகளையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளின் மூலம் ஸிக்கா, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்க…

Read More

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

குமார வெல்கமவின் மனு ஒத்திவைப்பு

தன்னைக் கைது செய்வதை தடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் பாகங்கள் சில கொள்வனவு செய்யப்பட்ட வேளையில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அதற்கான தடை உத்தரவை வழங்கமாறு கோரியே குமார வெல்கம நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை…

Read More