நில உரிமையும் நில மீட்பும்
நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமை பெற்றதல்ல. எங்கள் குழந்தைகளிடம் இருந்து கடன் பெற்றதேயாகும்’;. மேற்கூறிய வார்த்தைகள் அமெரிக்க செவ்விந்தியர்களால் 1700 களில் கூறப்பட்ட உபதேசங்களாகும். இக்கூற்று நிலத்தின் பெறுமதியை வெளிக்காட்டுவதோடு , நிலமானது எதிர்கால சந்ததிகளின் உடமைகள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. மனிதன் நீரிலோ, ஆகாயத்திலோ வாழ முடியாது. வாழ்வதாயின் அவன் நிலத்திலேயே வாழ்ந்து தீர…
