Headlines

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான  றிப்கான் பதியுதீனால் வழங்கப்பட்ட மன்னார் தாராபுரத்தில் நடாத்தப்படும் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பினை  மாணவர்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைத்தார்.   மாணவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும்  நோக்குடன் 1000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் இணைப்பு  அமைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலகத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் , வியாழேந்திரன் ஆகியோரின் தலைமையில் அண்மையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் உதயஸ்ரீ , மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுமின்றி கொள்வனவு செய்யலாம் – அமைச்சர் றிஷாத்

எதிர் வரும் பண்டிகைகாலத்தில் அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடுமின்றி கொள்வனவு செய்யலாம் என வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்.

Read More

கோரளைப்பற்று: உயர்தர தனியார் வகுப்புக்களுக்கு ஒரு மாதகால தற்காலிக தடை

கோரளைப்பற்று மத்தி,கோரளைப்பற்று மேற்கிற்கு உட்பட்ட பாடசாலைகள், தனியார் வகுப்புகள், கா.பொ.த உயர்தரம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உடனடியாக பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதகால தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (2016.12.19) நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிரதேசவாதிகளும்,சமூக அமைப்புகளும்,அதிகாரிகளும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற ரீதியில் இந்த தற்காலிக ஒரு மாதகால தடையினை பாடசாலைகளும்,தனியார் பிரத்தியேக கல்வி கூடங்களும் ஏற்று செயற்படுத்துமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பணிப்புரை…

Read More

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன் விழா மாநாடு-2016

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன் மாநாடு-2016(1966-2016)கடந்த 11,12,13ஆம் திகதிகளில் கொழுப்பு 07லில் உள்ள சுதந்திர சதுக்க இலங்கை மன்ற மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலை இலக்கிய துறைசார்ந்த எழுத்தாளர்களான மருதமுனையைச் சேர்ந்த புன்னகை வேந்தன், ஏ.ஆர்.ஏ.ஹமீட், எம்.எச்.ஏ.கரீம், ஏ.ஆர்.ஏ.சத்தார், கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், பாடகர் எஸ்.எம்.கமால்தீன், ஆகியோர் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்,…

Read More

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு

அமைதியாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான “சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்” வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைமன்றக் கல்லூரியில் நேற்று காலை (20) இடம் பெற்ற “கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர்…

Read More