Headlines

தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின் மத உரிமைகளை மீறும் விதத்தில், சிங்கள – பௌத்த குடியாட்டங்கள் ஏதும் இல்லாத, முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் பலவந்தமாக  புத்த சிலைகளை அமைப்பது இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு இடையூறாக இருப்பது மாத்திரமன்றி மதக்கலவரங்களுக்கும் வழிவகுக்கும் சந்தர்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமையும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, “இறக்காமத்துக்கு”…

Read More

ஏமாற்ற வருபவர்களுக்கு பாடம் புகட்டும் சமூகமாக இருப்போம் – A.R.M.ஜிப்ரி

எதிர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுகின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சாய்ந்தமருதில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8ஆவது புதிய கிளையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

புத்தளம் மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற ஆய்வை செய்து, மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. கணிதத் துறை அதி முக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும் பாலானோர் பின்தாங்கிய நிலையில் உள்ளனர். இத்துறையில் மாணவர்களை அபிவிருத்தி செய்ய நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது.

Read More

மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

புத்தளம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் காணியில் புதிய மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (2016.10.27) மிக விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பனர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் அலி சப்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Read More

பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி திறந்து வைப்பு

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, புத்தளம் பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி அண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

Read More

தொடரும்  புத்தளம் அபிவிருத்தி…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளை எம்.எச்.எம். நவவி  அவர்கள்  பார்வையிட்டார். புத்தளம் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக குவைட் வைத்தியசாலை 1 கிலோ மீட்டர் காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வு!

இலங்கை வடமாகாணத்தின் முல்லைதீவு, வவுனியா, மன்னார் ,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி யாழ்ப்பணத்தில் 1990 ஒக்கடபர் 30 ஆம் திகதி கிழக்கிலிருந்து கொலைவெறியுடன் வருகை தந்த நூற்றுக்கணக்கான ஆயுதம்தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் சோனக புரத்தை சுற்றி வலைக்க இரண்டு மணி நேரத்தில் முஸ்லிம்களை வெளியேற்றிய கருப்பு ஒக்டோபர் நினைவு தினம் பிரான் வாழ் யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது.

Read More