Headlines

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை: அமைச்சர் றிஷாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை சாய்ந்தமருதுவில், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து இன்று (21/10/2016) திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது இந்த உறுதிமொழியை வழங்கினார். கலாநிதி ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து…

Read More

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (21/10/2016) தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம் எழுதிய “இது ஒரு தருணம்“ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, ஒலுவில் கடலரிப்பினால் இந்தப் பிரதேச…

Read More