October 7, 2016
வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டும்மே தபால் சேவைகளை பெற்றுவருங்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு றிஷாத் பதியுதீன் என்னோடு சண்டையிட்டார்
அளுத்கம, பேருவளை கலவரம் இடம்பெற்றபோது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி றிஷாத் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டபோது அவ்வாறு கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறியவர்கள் தற்போது நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் அரசில் பிரபல அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவரது காரியாலத்தில் முஸ்லீம்களை நேற்று முன்தினம் (6) சந்தித்த பின்னர் முக்கியஸ்தர்கள் சிலருடன் கலந்துரையாடலில் இதனை அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரரை பேருவளை கலவரம் இடம்பெற்ற அப்போது நீங்கள் கைதுசெய்திருக்கவேண்டும் என அங்கு கருத்து…
