Headlines

வற்வரி முறைமை அவசியம் வருமான அதிகரிப்பும் தேவை

அரசாங்கத்தின் முறையான வரிக்கொள்கை முறைமை மற்றும் நம்பகத்தன்மை என்பன அடுத்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத் தில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரி முறைமை அவசியமான தேவையாக காணப்படுகின்ற போதும் அது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு வருமான அதிகரிப்புக்கு தேவையான ஆலோசனைகளையும், வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய உள்ளீடுகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு தலைவர்…

Read More

ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் குறித்து பிரிட்டனும் இலங்கையும் ஆராய்வு

ஜெனிவா மனித உரிமை பேரவையில்  கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள்   தொடர்பில்   இலங்கை அரசாங்கமும்  பிரிட்டன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்  பிரிட்டன்   பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும்   இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல்  தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.    இந்த சந்திப்பையடுத்து  தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை…

Read More

புஸ்ஸலாவை இளைஞர் மரண வழக்கு ஒத்திவைப்பு

புஸ்ஸலாவை – ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கம்பளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சாந்தனி மீகொட, நேற்று உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட நீதவான்,  எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

சேலை அணியத் தேவையில்லை

தங்களது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் தாய்மார்கள், கட்டாயமாக சேலை அணிந்திருக்க வேண்டுமென்று, அப்பாடசாலைகளின் அதிபர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை, உடனடியாக நீக்கிக்கொள்ளுமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால், அதிபர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

ராம்குமாரின் பிரேத பரிசோதனையை 30ம் திகதி வரை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்று உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்த போது, இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர். பிரேத பரிசோதனையின் போது பரமசிவம் சார்பில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் இடம்…

Read More

ஏறாவூர் இரட்டைக்கொலை: சந்தேகநபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஏறாவூர் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 6 பேரையும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணின், கணவரது சகோதரரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதவிர தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப்பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வுத்…

Read More

2 பள்ளிவாசல்களையும், 35 முஸ்லிம் பாடசாலைகயும் தரைமட்டமாக்க மியன்மார் அரசு உத்தரவு

மியன்மாரில் மதக்கலவரம் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் பல டஜன் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைகள் (மத்ரசா) உட்பட 3000க்கும் அதிகமான கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் புதிடொங் மற்றும் மொங்டோ நகரங்களில் அண்மைய ஆண்டுகளில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடும் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்களுக்காக மாநில அமைச்சர் கேணல் ஹிடைன் லின், நிலைமை கட்டுப்பாட்டை மீறும் முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த இரு நகரங்களிலும் 12…

Read More

ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் – அப்பாஸ்

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல்…

Read More

ஜேர்மனிலிருந்து தருவிக்கப்பட்ட துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்ட லசந்த, தாஜுடீன்

சண்டே லீடர் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தம் வெளியிடாத துப்பாக்கி மூலம் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஸ்பிரிங் ஒன்றினால் வெளியாகும் தோட்டாவை கொண்ட சத்தம் வெளியிடப்படாத துப்பாக்கியால் சுடப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொலை தொடர்பில் காணப்பட்ட இருவேறு மருத்துவ கருத்து தொடர்பில் உண்மை தகவலை பெற்றுக் கொள்வதற்காக லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும்…

Read More

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதற்காக  அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள் குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின் இணைத்தலைவர்களான, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More