Headlines

இணக்கம் காணப்பட்ட சதுர சேனாநாயக்கவிற்கு எதிரான வழக்கு!

நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சரின் மகனுமான சதுர சேனாநாயக்கவிற்கும் ராகம பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான வழக்கு இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த ராகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை திட்டி அச்சுறுத்தியதாக சதுர மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினரும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள இணங்கியிருந்தனர். இரு தரப்பினரதும் ஒப்புதலின் அடிப்படையில் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக நீர்கொழும்பு பிரதான நீதவான் ருசிர வெலிவத்த தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்!

இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3 N2 என்ற வைரஸ் தொற்றின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் வைரஸ் நிபுணர் ஜூட் ஜயமஹா…

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

இலங்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால இதனை அறிவித்துள்ளார். இந்த நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது டெங்கு மற்றும் சீக்கா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுளம்புகளினால் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப…

Read More

சட்டம் மற்றும் ஒழுங்குகளால் அரசாங்கத்துக்கு வருமானமிழப்பு

கெலும்பண்டார, யொஹான்பெரேரா தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் காரணமாக, அரசாங்கம் வருமானத்தை இழந்து வருகின்றது என்று, பொதுக்கணக்கு குழுவின் நாடாளுமன்ற கண்காணிப்புகுழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ணவால் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. ஒரு கணினி தரவு முறைமையைக் கொண்டு வந்து, இந்தக்குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அமைச்சுக்கள் அடங்களாக மொத்தம் 41 அரச நிறுவனங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு…

Read More

அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்

பிள்ளைகளை அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது நிதி மற்றும் பாலியல் ரீதியில் லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அறிவித்துள்ளார். குறிப்பாக இக்காலப் பகுதியில் 2017 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை தரம் 01 இற்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, எந்தவொரு அதிபராவது இவ்வாறு லஞ்சம்…

Read More

க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு 715,000 விண்ணப்பங்கள்

இந்த ஆண்டிற்கான கல்வி பொதுத்தரா தர சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் அணையாளர் நாயகம் டபுள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

வடகிழக்கு இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை – அமைச்சர் சரத் அமு­னு­கம

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு இலங்­கையர் என்ற பொது­வான அடை­யா­ளத்­துடன் வாழ வேண்டும் என விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்ற, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரா­ளு­மன்ற உரை உள்­ள­டங்­கிய ‘முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை…

Read More

“அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள்” றிஷாத்  அவசர வேண்டுகோள்

-ஊடகப்பிரிவு – அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல. ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு…

Read More

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

‘இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாது’

“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக்…

Read More

பாலஸ்தீன பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐ.நா.வில் கட்டார் அமீர்

அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் : பாலஸ்தீன் குறித்து ஐநாவில் கட்டார்  அமீர் பேச்சு….!! ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத்தொடர் தொடங்கி விட்டது. அதில் பங்கேற்று பேசிய கத்தார் அமீர் தமீம் பேசுகையில்…. அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் பாலஸ்தீன் பிரச்சினை 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே இருக்கிறது. இஸ்ரேல் மேலும் மேலும் பாலஸ்தீன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மேற்கு கூரையிலும், குத்சிலும் குடியிருப்புகளை…

Read More

இன்று சவூதி அரேபியாவின் தேசிய தினம்

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை வருகிறது. சவூதி அரேபியாவில் பொதுவாகவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், தேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 22 வியாழன் கிழமையும் அரசு விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவூதி அரேபியாவில் பணிப்புரிபவர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 22, 23,…

Read More