Headlines

இந்திய துறைமுகங்களினால் பாதிப்பு இல்லை!




இந்தியாவின் துறைமுக அபிவிருத்திகள் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக விஸ்தரிப்பின்போது இந்திய நிறுவனங்களும் அதில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக்கரை துறைமுகங்களின் அடித்தள கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் அது கொழும்பின் துறைமுகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கையில் இருந்து பணி ஓய்வுப்பெற்று நாடு திரும்பவுள்ள சிங்ஹா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சர்வதேச கடல்வலய மாநாடு நேற்று நடைபெற்ற போது அதில் சிங்ஹா உரையாற்றினார். இந்திய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்துறைக்கு கொழும்பின் துறைமுகம் எதிர்க்காலத்தில் முக்கிய பங்கை வகிக்கும்.

எனவே இந்திய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றமையானது, இலங்கைக்கும் நன்மையளிக்கும் என்றும் சிங்ஹா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு சர்வதேச கடல்வலய மாநாடு இரண்டாவது வருடமாக நடைபெறுவதுடன், நேற்று ஆரம்பமான இந்த மாநாடு, நாளை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *