Headlines

2070 இல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!

2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்! 2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் ‘ஆய்வு’ முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ‘உலக மதங்களின் எதிர்காலம்’ என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த…

Read More

மனைவியின் சடலத்துடன் நடந்தவருக்கு, பஹ்ரைன் பிரதமர் 9 லட்சம் நிதியுதவி!

ஒடிஷாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை ( வயது 42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து மெல்கர் கிராம மகளிர் சுயஉதவி குழுவிடம் இருந்து…

Read More

பிரதமர் நியூஸிலாந்துக்கு விஜயம்!

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார்.

Read More

மொனராகலையில் ஐஸ் கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!

ஒரு கிலோவுக்கு 0.25 சதமாக இருந்த சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை, 1.75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி புதிய தீர்வை 2 ரூபாவாக இருக்கும். இதேவேளை, சிவப்பு சீனிக்கான இறக்குமதி தீர்வை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவாக இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது கடந்த புதன்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தேவைக்கு 10 வீதம் குறைவான வீதத்திலேயே சிவப்பு…

Read More

சந்திர கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு

இலங்கை மக்கள் அனைவரும் இன்று தென்படவுள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். எனினும் இந்த சந்திர கிரகணத்தை அனைவரும் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட…

Read More

தலைவர் அஷ்ரப் கண்ட கனவு கரைந்து போகுமா?

கிழக்கின் உதய தாரகையாகத் தோன்றி ( 23.10.1947 ல்)  நாட்டின் அரசியல் வானில் ஒளிபரப்பி முஸ்லிம்களை  அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அரும் பாடுபட்டு அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து “சத்தியமே இலட்சியம்” என்று பறைசாற்றி அதன் வெற்றிப் பாதையையும் காட்டி விட்டு அதற்காகத் தன்னையே தியாகம் செய்துவிட்டு  மாபெரும் தலைவர் மர்ஹூம் எம். ஏச். எம். அஷ்ரப் அவர்கள் 16. 09. 2000 ல்…

Read More

உண்மைகள் உறங்குவதில்லை

கடந்த 11.09.2016 ஞாயிறு இரவு வசந்தம் தொலைக்காட்சி நடத்திய ‘ அதிர்வு ‘  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள்  கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக் கூடாது என்பதற்கான உண்மையான உறுதியான  தர்க்க ரீதியான நடைமுறை யதார்த்தங்களின் அடிப்படையில்  கிழக்கு மக்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் எடுத்துக் கூறிய காரணங்கள்   அனைத்தும் வலுவானதும்  வரவேற்கத்தக்கதுமாகும்.  அவர் எடுத்துக் கூறிய வரலாற்று உண்மைகள்  அவரின் நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்டியுள்ளன. அதற்கு…

Read More