Headlines

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் T-Shirt

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது. இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டி சர்ட்டில்’…

Read More

அமெ­ரிக்க படை­யி­னரை வெளியே­று­மாறு பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி உத்தரவு

பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லுள்ள அமெ­ரிக்கப் படை­யினர் வெளி­யேற வேண்­டு­மென அந்­நாட்டு ஜனா­தி­பதி ரொட்­ரிகோ டுடெர்டே தெரி­வித்­துள்ளார். தென் பகு­தி­யி­லுள்ள படை­யி­னர்­க­ளுக்கு பயிற்சி வழங்கி வரு­கின்ற அமெ­ரிக்க சிறப்பு படை­யினர் இருப்­பது, நிலை­மையை இன்னும் மோச­மாக்கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லி­ருந்து முதன்­மு­த­லாக ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள ரொட்­ரிகோ டுடெர்டோ, அங்­குள்ள இஸ்­லா­மி­யர்கள் மற்றும் கம்­யூனிஸ்ட் போரா­ளி­க­ளிடம் அமைதி பேச்­சு­வார்த்­தையை மீண்டும் ஆரம்­பித்­துள்ளார். இவர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றது முதல் சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் வர்த்­தகம் தொடர்­பாக அவ­ரது நிர்­வாகம்…

Read More

சிகிச்சைக்கு பின் குணமடைந்த ஹிலாரி கிளிண்டன்

நிமோனியா காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்த ஹிலாரி கிளிண்டன் நாளை வடக்கு கரோலினா மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடந்த…

Read More

விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஜனாதிபதி கேள்வி

ஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை எத்தகையதாக இருந்திருக்கும் என அரசாங்கத்தையும் தம்மையும் விமர்சிக்கின்ற எல்லோரிடமும் தாம் கேட்க விரும்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அனுபவங்களின்றி சிலர் நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவருகின்ற செயற்பாடுகளை விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அவற்றுக்கு அவர்களிடம் உள்ள தீர்வுகளை முன் வைக்குமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்கவினால் எழுதப்பட்ட ”நான்…

Read More

தலைக்கவசத்திற்கு எதிராக போராடிய அரசியல்வாதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக போராடிய மிக்சிக்கன் மாநிலத்தின் அரசியல்வாதி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார். மிக்சிக்கன் மாநிலத்தின் பிரதிநிதியான 66 வயதுடைய பீட்டர் பெட்டாலியா என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வட மிக்சிக்கன் பகுதியில் உள்ள அதிவேக பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது டிரக் ஒன்று மோதியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பீட்டர் பெட்டாலியா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

Read More

மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சப்ரகமுவ மாகாணத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்குவது தொடர்பான முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் முகமாக இறக்குவானை பரியோவான் கல்லூரியில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிPவுகள் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர். எனினும் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாணவர்களை…

Read More

கொலம்பியாவில் நிலநடுக்கம்

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில்    பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Read More

நெதர்லாந்தின் ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து முன்வந்துள்ளது. அந்தவகையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசேட வைத்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதுவர் Joanne Doornewaard ஜோஆன் டூர்நிவோர்டினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Read More

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி

கிளிநொச்சி – இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்தஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம்இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சிய பொருட்­களை விற்­பனை செய்தால் நடவடிக்கை

வற்­வரி திருத்­தங்­களின் போது அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டாது. அரசின் “உய­ரிய சில்­லறை விலையை” மீறி அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை விற்­பனை செய்­வோரை கண்­டு­பி­டிக்க நாடு முழு­வதும் விழிப்­புக்­கு­ழுக்கள் சோத­னை­களை மேற்­கொண்டு வருகின்றன என்று அர­சாங்­கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்­பாக ஆராயும் குழு தெரிவித்தது. கொழும்பில் நிதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சின் செய­லா­ளரும் அர­சாங்­கத்தின் வாழ்க்கை செலவு தொடர்­பாக ஆராயும் குழுவின் தலை­வ­ரு­மான ரி.வி.கே.பி.தென்­னகோன் மேலும்…

Read More

மத்திய மாகாணத்தில் வெளி மாணவருக்கு அனுமதி மறுப்பு

மத்­திய மாகாண தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் 2017 ஆம் ஆண்டு உயர்­கல்­வியை தொடர்­வ­தற்­காக விண்­ணப்­பித்த வெளி மாகாண மாண­வர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், இரத்­தி­ன­புரி மாவட்ட மாண­வர்கள் பெரிதும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகி இருப்­ப­தாக பெற்றோர் கவலை தெரி­விக்­கின்­றனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் தமிழ்­மொழி மூலப் பாட­சா­லை­களில் உயர்­தரப் பிரி­வு­களில் கலை, வர்த்­தகப் பிரி­வுகள் மாத்­தி­ரமே போதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. விஞ்­ஞான, கணித பிரி­வு­களில் உயர்­கல்­வியைத் தொடர விரும்பும் மாண­வர்கள் மத்­திய மாகா­ணத்­திற்குச் செல்­கின்­றனர். தற்­போது, இம் மாண­வர்­க­ளுக்கு அங்கும் கத­வ­டைப்பு செய்­யப்­பட்­டி­ருப்­பதால்,…

Read More