Headlines

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட திட்டம்

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கூறினார். இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர்; இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதுதொடர்பான நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More

சம நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

25 நிர்வாக மாவட்டங்களிலும் ஒரே விதமாக அபிவிருத்தியை முன்னெடுப்பது  அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தேசிய அபிவிருத்தியின் முக்கியத:துவத்தை இனங்கண்டு சமநிலையான அபிவிருத்தி நாட்டில் ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்கும் வருடமாக அடுத்த வருடம் பிரகடனப்படுத்தப்படும்; என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார். நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை…

Read More

முன்னாள் சுங்க அதிகாரிக்கு விளக்கமறியல்

2007ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரையான சொத்து விவரத்தை சமர்பிக்கத் தவறிய, முன்னாள் சுங்க அதிகாரியான ரஞ்சன் கனகசபையை, செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டார்.

Read More

பிரதமர் ரணில் அதிருப்தி!

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் இந்த அதிருப்தியை பிரதமர் வெளியிட்டுள்ளார். வருடாந்த பொலிஸ் தினத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சாகல ரட்நாயக்க, பிரதமரிடம் கலந்துரையாடியபோது ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பில் பாரிய பிரச்சினைகளை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாட்டில் கொலை கொள்ளை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் கொலையையும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்….

Read More

மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் கிர்தின் நி்த்தியானந்தம். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான். இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை டமோக்சி பென் என்ற மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். வளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர, புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. இந்நிலையில் இதற்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான். இதுகுறித்து கிர்தின்…

Read More

விளையாட்டுத்துறை அமைச்சு மீது சேறுபூச திட்டம்!

ஒலிம்பிக் போட்டிக்கு 40 பேர் சென்றமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு மீது சேறு பூசப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான 40 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பி க்கிற்கு சென்றதாகவும், இதில் விளையாட்டுக்குழுவிற்கு தேவையான அதிகாரி கள் மற்றும் வீரர்களே உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் இதை விட அதிகமானவர்கள் சென்ற சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாகவும்,ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் விளை யாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சேறு பூசுவதற்காக…

Read More

பாரிய மோசடிகள் குறித்த ஒன்பது விசாரணைகள் நிறைவு

பாரிய மோசடிகள் தொடர்பான ஒன்பது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கை களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதி பதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதி பதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில்…

Read More

540 சீனி மூடைகள் மாயம்

25 இலட்சம் ரூபா பெறுமதியான 540 சீனி மூடைகள் மாயமாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்து ள்ளது. குறித்த முறைப்பாட்டில், இறக்குமதி  செய்யப்பட்ட 540 சீனி மூடைகளை போக்குவரத்து ஒப்பந்த நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய போதிலும், அது இன்னும் தமது நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்த நிறுவனத்திடம் போக்குவரத்து உரிமையை பெற்ற, மற்றுமொரு உப ஒப்பந்த நிறுவனத்தினால் அந்த சீனி மூடை கொள்கலன் எடுத்துச்…

Read More

மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித

70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…

Read More

ஐஸ்கிறீமுக்கு இரண்டு காலவதி திகதிகள்

–  எம்.றொசாந்த் இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?

பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20…

Read More

ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More