Headlines

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்ப ட்டுள்ளார். வை.கே.சிங்ஹா பிரிட்டனுக்கான  தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூ லராக அவர் செயற்பட்டிருந்தார் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் டரான்ஜித் சிங்…

Read More

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி

ஃபெபெட்ஸ் ஸ்ரீலங்கா மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கண்காட்சி எதிர்வரும் வியாழக்கிழமை 26ஆவது தடவையாக ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.

Read More

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதற்காக விமானம் மூலம் செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் புறப்பட்டு வெளியே வந்தார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் பாதுகாப்பாக அணி…

Read More

அமெரிக்காவின் நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார். அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து…

Read More

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: வாசுதேவ

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒப்பந்தத்தின் உண்மை நிலையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருகையின் போது அறிந்துக் கொள்ள முடியும். நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வேஷமும் பிரசாரமமும் கலையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து…

Read More

பேராதெனியவில் துப்பாக்கிச்சூடு:கடை உரிமையாளர் பலி

கண்டி, பேராதெனியவில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நிலக்கரி இறக்குமதி ; அமைச்சரவை இறுதி தீர்மானம்

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி  செய்வது தொடர்பிலான கேள்வி பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை இறுதி தீர்மானம் எடுக்குமென மின்சக்தி மற்றும் சக்திவலு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More

அல்லாஹ்தான் பெரியவன் என முழங்கி, உலகின் நீண்டபாலத்தை திறந்த எர்துகான்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹ்தான் பெரியவன் என்ற வார்த்தையை முழங்கி கொண்டு துருக்கிய குடியரசு அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள உலகின் மிக நீண்ட பாலத்தை இன்று -26- திறந்து வைத்தார்.

Read More

வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை திசை திருப்பவே கப்பம் கோரப்பட்டது

விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அண்மையில் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள்…

Read More

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டம்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலைமனுக் கோரல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையில் பொது முயற்சியான்மை சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை மனுக் கோரல் மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட…

Read More