Headlines

இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர். மக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷிதவின் மற்றொரு சொத்தும் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா…

Read More

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240 கோடி ரூபா வருமானம்

மீன்பிடி அமைச்சு அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். றுகுணு பல்கலைக்கழகத்தின் மீன் உயிரியல் பிரிவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மாத்தறை பொல்ஹேன, மடிக, ஹிக்கடுவ, உணவட்டுண ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240…

Read More

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த வருட…

Read More

துபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு-கடற்கரையுடன் ஓட்டல்

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. அதில் மழைக்காடுகள், கடற்கரை, மரங்கள், நீரை வாரியடிக்கும் நீச்சல் குளம், மூடுபனி போன்றவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஓட்டலுடன், குடியிருப்புகளும் அதில் கட்டப்பட உள்ளன. இந்த அதி நவீன ஓட்டல் ரூ. 2300 கோடி செலவில் கட்டப்பட்டு…

Read More

நாமலுக்கு விளக்கமறியல்

இன்று (15) காலை நிதி மோசடி  விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி  விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல்  நிதி மோசடி  விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்த மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள்

சாய்ந்தமருதை சேர்ந்த K.M. இப்ராத் என்ற மாணவன் நேற்று (14) கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு பயணித்தவர் இன்னும் வீடு சென்றடையவில்லை. இடை வழியில் எந்த தொடர்புகளும் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இவரது பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் 0777118327 / 0773447490 / 0773165295 என்ற இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More

ஹாட்ரிக் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வெல்வார் என்பது தான் மற்றோரு கணக்கு. உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? தொடர்ந்து மூன்றாவது முறையால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்ற கேள்விகளோடு களமிறங்கினார் போல்ட். அனைவரும் எதிர்பார்த்த 100 மீட்டர் போட்டி தூரத்தை 9.81 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த…

Read More

வவுனியாவுக்கான பொருளாதார மையம் தேக்கவத்தையில் : கூட்டத்தில் முடிவு

நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா…

Read More

தமிழ்த் தலைமைகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அஸ்மின்: மௌலவி சுபியான் குற்றச்சாட்டு

-சுஐப் – தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கூற்றை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் மௌலவி பி.ஏ.சுபியான் வெகுவாகக் கண்டித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் மூலம் அக்கட்சியினால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்…

Read More

கடைகளை மூடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது!

கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார். அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்குள்ள விவாசாயிகளை…

Read More

மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின்…

Read More