Headlines

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படவுள்ளதாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரே…

Read More

தலைமன்னார் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Read More

ஜப்பானில் அணு மின்நிலைய அலகுகளை மூடும் அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

ஜப்பான் நாட்டில் மேற்கு பகுதியான கன்சாய் மாகாணத்தில் இயங்கிவந்த டகாஹாமா அணு மின்சார உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு அலகுகளை மூடும்படி உத்தரவிட்ட அரசின் முடிவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Read More

மனசாட்சியுடன் செயற்படுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம்!

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தமது மனசாட்சிக்கு ஏற்ப உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுவதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்காக சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். காலம்சென்ற முன்னால் கலாசார பிரதியமைச்சரும் அகில இலங்கை சிங்கள கவிதைகள் சம்மேளனத்தின் மூலகர்த்தாவுமான சோமவீர சந்திரசிறி அவர்களின் 45 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று (11) பிற்பகல் கெஸ்பேவ நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்…

Read More

நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் காற்றுடன் மழை?

நாட்டைச்சூழவுள்ள பிரதேசங்களில் இன்று(12) கடும் காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு அதிகமாக காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதுடன் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலும் காற்றின் தாழமுக்கம் நாளையுடன்(13) குறைவடையலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக…

Read More

பொதுமன்னிப்பு காலத்தில் 14000 இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக விலகல்

பொதுமன்னிப்பு காலவேளையின் போது முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 14000 படைவீரர்கள் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேவையை கைவிட்டு தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளை(13) யுடன் நிறைவடையவுள்ளது.   அதற்கமைய நேற்று முந்தினம் (11) ஆம் திகதி வரையில் 12,347 இராணுவ வீரர்களும், 544 விமானப்படை வீரர்களும் 756 கடற்படை வீரர்களும் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்…

Read More

கல்வி நிர்வாக சேவைக்குள் ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இல் நிலவும் பொது மற்றும் விசேட சேவை பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நேற்று முந்தினம் 10 ஆம் திகதி…

Read More

டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா!

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர். இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார். இதன்படி நாளை…

Read More

இன்று முதல் 11% வற் அறவிடப்படும்

‘வற்’ (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கான தீர்மானத்தைக் கைவிடுமாறு, இடைக்காலத் தடையுத்தரவை உயர்நீதிமன்றம், நேற்றுப் (12 பிறப்பித்தது. மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், வரி அதிகரிப்பைக் கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு மேற்படி இரண்டு வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் கட்டளையிட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட இவ்விரு வரி அறவீடுகளும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதாக, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, 11 சதவீதமான வற் அறவிடப்படும்…

Read More

அனுர சேனாநாயக்க பிணைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை வழங்குமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்  அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவினை நிராகரித்ததை  தொடர்ந்து அதனை மேன்முறையீடு செய்யுமாறு கோரியே குறித்த மனுவினை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியொர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை…

Read More

நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டு சாப்பாடு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் இரவு சாப்பாடு சிறைச்சாலையிலேயே வழங்கப்பட்டது. 70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல்…

Read More