Headlines

களைக்கட்டும் கச்சத்தீவு

இந்தியாவில் தமிழக தேர்தல் களத்தில் இலங்கை கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.  தமிழக முதல்வர் ஜெயலிலதா ஜெயராம் கடந்த தினம் அறுப்புக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் கச்சத்தீவின் அதிகாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கமே இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அத்துடன் கச்சத்தீவினை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தமிழக முதல்வர் ஜெயலிலதா கூறியதை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துள்ளது. கச்சத்தீவானது, தமிழகத்தில் அவசரகாலநிலைமை அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும், இதற்கும்…

Read More

இலங்கைக்கு பங்களாதேஷ் எதிர்ப்பு

இலங்கை பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கடல் எல்லை விஸ்தரிப்பு குறித்த விடுத்த கோரிக்கைக்கு  பங்களாதேஷ் அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பினை விஸ்தரிப்பதற்காக அனுமதி கோரியிருந்த நிலமையில்  அக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்திருந்த கோரிக்கையில் பங்களாதேஷின் கடற்பரப்பின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளதாகவும்  இவ்வாறு கடற்பரப்பினை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என பங்காளதேஸ் அறிவித்துள்ளது. தமது கடல் எல்லையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை…

Read More

அதிக கட்டணம் வசூலித்த பேரூந்து நடத்துனர்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்பட்டிருந்த விசேட பேரூந்து ஒன்றில் அசாதாரணமான முறையில் பயணிகளிடம் இருந்து அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கண்டி – ஹட்டன் வீதியில் பயணித்த பேரூந்து ஒன்றிலேயே இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கண்டியிலிருந்து கினிகேத்தனவிற்கு 68 ரூபா அறவிடப்படும் எனினும் இப்பேரூந்து நடத்துனர் 250 ரூபா கேட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read More

ஐந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றமையால் குறித்த ஐந்து இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் 20 முதல் 24 வயதுகளை உடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

3 கிலோ கஞ்சா போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று…

Read More

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் திடீர் சோதனை

யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் நேற்­று­முன்­தினம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டு சற்று நேரத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரிகள் வழங்­கிய பாது­காப்பு தொடர்­பான எச்­ச­ரிக்கை அறி­விப்பை அடுத்தே விமானம் தரை­யி­றக்­கப்­பட்­டது. விமானம் தரை­யி­றக்­கப்­பட்ட பின்னர்இ சில பய­ணி­க­ளிடம் சிங்­கப்பூர் பொலி­ஸாரும்இ விமான நிலைய பாது­காப்பு அதி­கா­ரி­களும் விரி­வான விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளனர். இவர்­களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம் கூறி­யுள்­ளது….

Read More

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு

மாத்தளை – லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல – வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

Read More

பிறந்து 45 நாளான சிசுவை தாக்கிய தந்தை

பிறந்த 45 நாட்களான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகலாக மாறி கோபமடைந்த கணவன் பிறந்து 45 நாட்கள் நிறம்பிய தனது குழந்தையின் தலைபகுதியில் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக மனைவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார். நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த கணவன் தன்னை கெட்டவார்த்தைகளால் ஏசியதாகவும் தன்னையும் தனது…

Read More

ஜனா­தி­பதி– வடக்கு முதல்வர் திங்களில் சந்­திப்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கினேஸ்­வ­ர­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு எதிர்­வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்­பெ­ற­வுள்­ளது.

Read More