தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு
இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்காக கனிய வள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கனிய வள எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைவடையும் என்று அமைச்சர்.
தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜ யம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை சீனாவிற்கு செல்லவுள்ளார். இதன் போது துறைமுக நகர் திட்டத்தின் முன்னெடுப்புகள் உள்ளிட்ட சீனாவின் முதலீடுகள் தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களில் அவர் ஈடுப்படவுள்ளதாக தெரிகின்றது.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.