Headlines

பொலிஸ் சேவையை மக்கள் நட்புடைய சேவையாக ஆக்குவதே எமது நோக்கம்

பொலிஸ் சேவையை உண்மையான மக்கள் நட்புடைய சேவையாக ஆக்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) பொலன்னறுவையில் ஜனாதிபதி அலுவலகம், சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொள்ளும் ஒன்றிணைந்த பொலிஸ் நடமாடும் சேவையின் முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘சிறந்ததோர் சமூகம் – பாதுகாப்பான ஒரு நாடு’ என்ற கருப்பொருளின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்த,…

Read More

தெற்கு ஊடகவியலாளர்களின் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தலைமையிலான தெற்கு ஊடகவியலாளர்கள் நேற்று(27) வடக்கு மாகாண ஆளுனர், மாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தனர். அத்துடன் இக்குழுவினர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை மற்றும் ஊடகநிறுவனங்களுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம் எனும் தொனிப்பொருளில்  வடக்கு தெற்கு ஊடக சகோதரத்துவத்தை ஒன்றாக இணைக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு நல்லிணக்க பயணம் ஒன்றினை ஊடகத்துறை அமைச்சர்…

Read More

டிமென்ஷியா நோய் தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வு

முதுமையடையும் போது மூளையில் உள்ள அணுக்கள் செயலிழப்பதால் ஏற்படும் டிமென்ஷியா நோய் தொடர்பில்  அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (28) நடத்தப்பட்டது. மாத்தளை மாவட்டச் செயலாளர் திருமதி ஈ.ஈ.சீ விதானகமாச்சி தலைமையில் காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை அரச அதிகாரிகளுக்கும் 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை பொது மக்களுக்கும் டிமென்ஷியா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை அல்ஸிமஸ் மன்றத்தின் வைத்தியர் ஹர்ஷன இந்நிகழ்வில்…

Read More

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது: பைசர் முஸ்தபா

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்று கூக்குரல் இடுவதனால் கட்சியை தோற்கடித்துவிட முடியாது. சில திட்டமிட்டு இவ்வாறு கூக்குரல் இடுவதனால் கட்சியை உள ரீதியாக…

Read More

துபாயில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை

பல்வேறுபட்ட  திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமூக மறுமலர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிந்தவூர் நலன்புரிச்சபையின்  கிளை அண்மையில்  துபாயில்  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தலைவராக பொறியியலாளர் AL.சிராஜ் முகம்மது ,உபதலைவராக அல் ஹாபிஸ் AC அஸ்ரப், செயலாளர் AM.அச்சிமுகம்மது உப செயலாளர்      B.M.Y  நளீர் பொருளாளர், M.Y அன்வர்(சப்ரி) உட்பட இன்னும் அமீரகத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு  இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிகழ்விலே  விசேட உரையாற்றிய NWC  இன் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது உரையில்  “கல்வியினூடாக  முன்னேறி உலகளாவிய…

Read More

கழுகை தொடர்ந்து மயில் வேட்டை : பொலிஸார் வலைவீச்சு

மயில்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரியுமாயின் 070 3303022 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம்

சமூக வளைத்தளமான பேஸ்ப்புக் நிறுவனம் சர்வதேச ரீதியில் மன்னிப்புக் கோரியுள்ளது. பேஸ்ப்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய safety Check நேற்று (27) சிலமணி நேரம் இயங்காமல் போனமைக்காகவவே குறித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. குறிப்பாக திடீர் அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பபத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு  safety Check Notifications அது தொடர்பான அறிவித்தல் விடுக்கும். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் -தாகூர் வெடிப்பு சம்பவ நேரத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check இயங்காமல் போயிருந்துள்ளது. இதனால் பேஸ்புக் பாவனையாளர்களின்…

Read More

வவுனியாவில் சிங்க லே

வவுனியா பிரதேசத்திற்கு இனவாத அமைப்பான சிங்க லே  வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது. வவுனியா, அவுரந்துலாவ பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்களே அமைப்பின் தலைவர் ஜம்துரே சந்திரரட்ண தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். அதன் பின்னர் அப்பகுதியில் சிங்க லே அமைப்பின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதார வைத்திய நிலையம் ஒன்றினையும் திறந்து வைத்தனர்….

Read More

மின்சார கோளாறுகளால் பெரும் நெருக்கடி

நல்லாட்சியில் கட்சி பேதங்களையும் தொழிற்சங்க பேதங்களையும் மறந்து மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நானுஒயா, டெஸ்போட் மேல்பிரிவு, கிழ்பிரிவு, கிலோஷா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 61 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோரும்…

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்றிட்டங்கள்

இலங்கையிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (28) காலை 9.30 மணிக்கு, கண்டி வத்தேக  சமூக சேவைகள் திணைக்கள தொழிற்கல்வி மத்திய நிலையத்தில் சமூக சேவைகள் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வினையடுத்து உடற் சுகாதார நிகழ்வுகள், பரா ஒலிம்பிக் இலக்குபடுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளுக்கான  மாவட்ட பயிற்சி மத்திய நிலையம்,…

Read More

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) நல்லெண்ண அடிப்படையில் நேற்று முந்தினம் (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இதேவேளை, இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து…

Read More

72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில்…

Read More