Headlines

வெளிநாட்டு நிதிக்கான வங்கி வைப்பில் சிக்கலில்லை

வெளிநாட்டு நிதியை இலங்கையின் வங்கிகளில் வைப்பிடும் போது, புதிய சட்டத்திட்டங்கள் அமுலாக்கப்படுவதாக கூறப்படும் செய்தி மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிதாக இவ்வாறான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறி இருந்தார். இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவின் பணிப்பாளர் எச். அமரதுங்க, வெளிநாட்டு நிதியை இலங்கையின்…

Read More

உணவு விசமானதால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலை உணவு விசமானதால்  20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விசமடைந்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 8 மற்றும் 9 வயதான மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் , அவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

23 ஆம் திகதி அமைச்சராகும் பொன்சேகா

– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிவழங்கப்படவுள்ளது.  எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். வடமத்திய, மத்திய மற்றும் ஊவாக மாகாணங்களுக்கான மாநகர அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். (vk)

Read More

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு முன்னதாக அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

யோஷிதவுக்கு ஆதரவு: நான்கு வீரர்கள் இடைநிறுத்தம்

டயலொக் றக்பி லீக் போட்டியின் போது, ‘Y007’ என எழுதப்பட்டிருந்த பட்டியை கைகளில் அணிந்திருந்த, கடற்படை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் நால்வரை இடைநிறுத்தியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தியகமயில், ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற போட்டியின் போதே, கடற்படை விளையாட்டுக் கழகத்தின்  முன்னாள் தலைவர்  யோஷித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குறித்த வீரர்கள் பட்டிகளை அணிந்திருந்தனர். இதற்கமையவே, குறித்த வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.tm

Read More

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது

வெள்ளவத்தைப் பிரதேசத்தில்  இன்று(15) அதிகாலை ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதி ஒன்றில் வைத்தே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 14 கிராம்100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் போதை விற்பனை மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாயையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்ணும், 24 வயதான இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார்…

Read More

நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நவ்சர் பவுசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதம நீதவான் கிகான் பிலபிடிய முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, நவ்சர் பவுசிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதிக்கு மேற்கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

Read More

கனடாவில் முதன்முறையாக நீதிபதியான திருநங்கை

கன­டாவில்  முதன்­மு­றை­யாக திரு­நங்கை ஒருவர் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ளார். கன­டாவின் வர­லாற்றில் முதன் முத­லாக அந் நாட்டின் மனிடோபா மாகா­ணத்தை சேர்ந்த திரு­நங்­கை­யான காயெல் மகென்ஷி மாகாண நீதி­ப­தி­யாக அதி­கா­ர­பூர்­வ­மாக பத­வி­யேற்­றுள்ளார். மனி­டோபா பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டக்­கல்­வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்­க­றி­ஞ­ராக பட்டம் பெற்றார். சட்­டத்­து­றையில் அவ­ருக்கு இருந்த திற­மையின் அடிப்­ப­டையில், அவரை மனி­டோபா மாகாண நீதி­ப­தி­யாக தெரிவு செய்­துள்­ள­தாக சட்­டத்­துறை அமைச்­சகம் கடந்த டிசம்­பரில் அறி­வித்­தி­ருந்­தது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வின்­னிபெக் நகரில்…

Read More

ஆறு வயது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து பலி

பதுரலிய பிரதேசத்தில் ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக வருகை தந்து அங்கு தங்கியிருந்த   விடுமுறை விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்தே சிறுவன் உயிரிழந்துள்ளான். பாயகல பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு

ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 28ஆவது தடவையாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, இந்த கப்பலில் வருகைத் தந்திருந்த இளைஞர் யுவதிகளை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கப்பலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடல்களை…

Read More

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து…

Read More

கோத்தாவை கைது செய்ய பணிப்புரை கிடைக்கவில்லை! பொலிஸார் தகவல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன. இந்தநிலையிலேயே, பொலிஸ் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள முக்கியஸ்தர்களுக்கான அறைகள் திருத்தப்படுவதாக வெளியான செய்திகளுடன் கோத்தாபாயவின் கைது விடயமும் பேசப்பட்டது. எனினும், கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படுவதற்கான பணிப்புரை கிடைக்கவில்லை என பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர்…

Read More