Headlines

சுவர்களில் எழுதப்பட்டு வரும் சிங்ஹ லே – பொலிஸார் விசாரணை

கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ‘சிங்ஹ…

Read More

ஈரானை புறக்கணிக்கும் அரபுநாடுகள்

ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது தவிர பஹ்ரைன் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் சவூதி அரேபிய பாணியில் ஈரானை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளது. பஹ்ரைனில் இருக்கும் ஈரான் ராஜதந்திர அதிகாரிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

நல்லாட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள குழுக்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இலங்கையில் அரசு மாற்றம் ஏற்பட்டு ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைய உள்ளது. அன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 3…

Read More

நீரில் மூழ்கி இரு சிறுமிகள் பலி

வாழைச்சேனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி, இரு சிறுமிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தின் போது 13 மற்றும் 14 வயதான சிறுமிகளே உயிரிழந்துளள்னர். நேற்று (4) மாலை பூங்கா அருகில் இருந்த குளம் ஒன்றில் இறங்க முற்பட்டபோதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

4 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த படகு ஒன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது. மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி…

Read More

முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை

இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணிக்க வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு மடகஸ்கார் சென்ற போது இவர் தங்கியிருந்த அறையில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னுடன் கொண்டு சென்ற பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவரது ஜனாசா நேற்று மடகஸ்காரில் நல்லடக்கம்…

Read More

பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து

அம்பலங்கொட – கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

விமானப்படை வீரர்களுக்கு முகப்புத்தக பாவனைக்கு தடை?

விமா­னப்­படை தள­பதி சுகத் புளத் சிங்­க­ளவின் உத்­த­ர­வுக்கு அமைய விமா­னப்­படை நிர்­வாக இயக்­குனர் இதற்­கான அறி­வு­றுத்­தலை விமா­னப்­படை வீரர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார். அதன்­படி சுமார் 4000 விமா­னப்­படை வீர வீராங்­க­னைகள் தமது முகப் புத்­த­கத்தை பயன்­ப­டுத்தும் உரி­மையை இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் தற்­போது விமா­னப்­படை வீரர்­களும் அதி­கா­ரி­களும் பயன்­ப­டுத்­தி­வரும் முகப்­புத்­தக கணக்­கு­க­ளையும் அவர்கள் மூட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக விமா­னப்­படை வீரர்கள் தெரி­விக்­கின்­றனர். பாது­காப்பு பேர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாகவே இவ்­வாறு முகப் புத்­தக தடை அமுல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக…

Read More

உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார்….

Read More

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று மாலை நான்கு மணி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை ,…

Read More

சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது

இந்­தி­யா­வுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதி­லாக வர்த்தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படவுள்­ள­தாக அர­சாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்கையில், இந்­தி­யா­வுடன் சீபா உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்படப்  போவ­தா­கவும் இதனால் இலங்கையை இந்­தியா ஆக்­கி­ர­மித்­து­விடும் என்றும் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இதில் உண்­மை­யெ­து­வு­மில்லை. இது தொடர்­பாக பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளி­வான அறிக்­கை­யொன்றை விடுத்தார்.தனது இந்­திய விஜ­யத்தின் போது சீபா உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­வில்லை. அவ் உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படாது என்றும் தெரி­வித்தார். தேசப்­பற்று தொடர்­பாக பேசும்…

Read More