Headlines

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோ ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள் தயாரித்துள்ளனர். விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளிடம் நட்பு ரீதியில் பழகி அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்டது….

Read More

கிரிக்கெட் தேர்தலில் பிரதித் தலைவர் பதவிக்கு அர்ஜுண

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் தேர்தல் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதோடு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உபாலி தர்மதாஸவும் கலந்துகொண்டுள்ளார். தலைமைத்துவதற்கு போட்டியிடுமாறு அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை…

Read More

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி 25 இலட்சம்  ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…

Read More

கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஊவா மாகாண சபை அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன் வளர்ப்பு அமைச்சராக உபாலி டெல்டன் சமரவீர பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சமரவீர ஊவா மாகாண சபை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் 15 வருடங்கள் ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.

Read More

பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கருணாரத்ன பரணவிதான இதற்கு முன்னர் உள்ளூராட்சி மற்றும்  மாகாண சபைகள் பிரதி அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்

இந்தியா தமிழக தலைநகர் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் – மைத்ரி” என தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாட்டில் பெய்து வரும் கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் இதுவரையில் 269 பேர் உயிரிழந்ததுடன் இலட்சக் கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தமது…

Read More

இளையோர் பாராளமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று

இளையோர் பாராளமன்றத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று மஹரகம இளைஞர் பேரவையில் அமைந்துள்ள இளையோர் பாராளமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள இளைஞர் கழகங்களில் அங்கத்தவர்களாக உள்ள இளைஞர், யுவதிகளை தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்து இவ் இளையோர் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே இதன் நடைமுறையாகும். அந்த வகையில் இந்த தடவை 160 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை பல்கலைக்கழகங்கள் ,சிவில்…

Read More

அன்று முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்றேன், இன்று கண்கள் கலங்குகிறேன்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இஸ்லாமியர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர். பின்னர் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு வழங்கினர். அப்போது ஒரு முதியவர் இதே இஸ்லாமியர்களுக்கு அன்று நான் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்றேன், ஆனால் இன்று அதே இஸ்லாமியர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மீட்டு பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு கொடுக்கிறீர்கள் என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினார். இன்று என் குடும்பம் உயிர் பிழைக்க அல்லா தான் உங்களை…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10.000 டொலர்கள் வழங்கிய சங்கா

இந்தியாவில் தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கட் வீரர் சங்ககார  10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். அத்துடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.. இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்..

Read More