Headlines

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து  இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால்  கண்டன பேரணி நடத்தப்பட்டது. திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த  குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர். பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடலில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு என்ன வகையிலான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர்…

Read More

சந்திரனில் கடல் : நாசா அதிர்ச்சி

சனிகிரகத்தின் சந்திரனில் கடல் இருப்பதை நாசா விண்கலம் கண்டு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு அனுப்பிய ‘காசினி” என்ற விண்கலம் கிரகங்களையும், அவற்றின் சந்திரன்களையும் கண்டு பிடித்து படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சனிகிரகத்தின் ‘என்சி லாடஸ்” என்ற சந்திரனின் மிக அருகில் அதாவது 30 கி.மீட்டர் தொலைவில் தென்முனையில் சந்திரனின் அடிப்பகுதியில் உறைந்த நிலையில் நீராவி மற்றும் பல மூலக்கூறுகள் இருப்பதை படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2005…

Read More

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது :கோத்தபாய

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்

– ஜவ்பர்கான் – எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள். இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார். காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின்…

Read More

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தத் தடை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹ_வளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை, வெலிக்கடை, மிரிஹான, கிரிபத்கொடை, தலங்கம மற்றும் வத்தளை ஆகிய நகரங்களில் விதிக்கு முரணான வகையில் வாகனத்தை செலுத்துதல், அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல் மற்றும் முச்சந்திகளில் வாகனங்களை முந்திச் செல்லுதல் என்பன இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…

Read More

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தீவிரமில்லை என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…

Read More

அவன் கார்ட் கப்பலை இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை!

அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்த உள்ளனர். கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த 29ம் திகதி கப்பலுக்குள் பிரவேசித்து கப்பலில் காணப்பட்ட 810 ஆயுதங்களையும் பரிசோதனையிட்டுள்ளனர். இந்த ஆயுதக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாஜூடின் விசாரணை: உறவினருக்கு அச்சுறுத்தல்

ரகர் வீரர் வசீம் தாஜூடின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தாஜூடினின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி…

Read More

தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகம் உறுதியாகியுள்ளமையினால் மீண்டும் தாய் நாட்டிற்கு வருமாறு தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் மூலம் உறுதியளித்துள்ள அனைத்து உரிமைகளை வலுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைக் குழு நிறுவப்படுவதற்கு தங்கள் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தூதரக அலுவலகத்தினால்…

Read More