யாழ் முஸ்லிம்களின் வரலாற்று நுால் வெளியீட்டு விழாவுக்கு றிஷாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி
ஊடகப் பிரிவு அஸ்ஸலாமு அலைக்கும். இன்று இடம் பெறும் இந்த நுால் வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த போதும்,தவிர்க்க முடியாதத காரணம் காரணமாக வருகைத்தர முடியாமையினையிட்டு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். வடமாகாண முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டை பொறுத்தவரையில் பதிவு செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும்.பல நுாற்றாண்டு கால வரலாற்றைவுடைய வடமாகாண முஸ்லிம்களின் கடந்த கால அரசியல்,சமூக பொருளாதார வரலாறு என்பது நாட்டின்…
