Headlines

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் – அமைச்சர் றிஷாத்

மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.அதிகமான பொதுமக்ளும் பிரசன்னமாகி இருந்தனர்.

Read More

இலங்கை மொபைல் பாவனையாளர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

அறிமுகமில்லாத இலக்கங்களில் வரும் தவறுதலான அழைப்புகளுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பிரதிப் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான லங்கா ரஞ்சினி இதனை தெரிவித்துள்ளார். தெரியாத இலக்கங்களிலிருந்து வரும் தவறுதலான அழைப்புகளுக்கு இளைஞர் யுவதிகள் திருப்பி அழைத்து பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளமை குறித்து அநேக முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்க பெறுகின்றன. அதிகளவிலான யுவதிகள் இவ்வாறான தவறுதலான அழைப்புகளுக்கு மீண்டும் அழைத்து தெரியாதவர்களுடன் பேசி…

Read More

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கை செலவால், அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முற்பணமானது போதாது எனவும் தற்போது வழங்கப்படும் முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்து வழங்க வேண்டுமென்று அந்த கோரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Read More

தூக்கு தண்டனையை நிறுத்துங்கள் பாகிஸ்தான் தூதரை அழைத்து ஜெர்மனி கண்டனம்

பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை உச்சகட்டமாக ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை கருத்தில் கொண்ட ஜெர்மனி, அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரை…

Read More

2030-ல் உலகம் 40 சதவிகித தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் – ஐ.நா.

பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்துடன் மழைவீழ்ச்சி படிவங்கள் ஒழுங்கு முறையற்றதாக காணக்கூடியதாக இருப்பதால் நிலத்தடி நீர் இருப்புக்கள் ஏற்கனவே குறைந்து கொண்டு செல்கின்றன. 2050 அளவில் உலகத்தின் சனத்தொகை 9-பில்லியன்களாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதும், விவசாயம், தொழில் மற்றும் தனிப்பட்ட நுகர்வு போன்ற தேவைகளிற்கு அதிக நிலத்தடிநீர் பாவிக்கப்படுவதும்…

Read More

‘தாயையும், பிள்ளையையும் மந்த போசனையிலிருந்து பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை’ மைத்திரி

தாயையும், பிள்ளையையும் மந்த போசனையிலிருந்து பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஸாக்கு பொதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் எனும் வகையில் நாம் தாய்மாரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, போசனை பொதியின் ஊடாக ஒரு தாய்க்கு சுமார் 20 ஆயிரம்…

Read More

தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு

சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தில் (International vocational academy) தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவர் லயண் சித்தீக் நதீர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்த…

Read More

கலேபோகஸ்வெவ மக்கள் அமைச்சர் றிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் விஐயம் செய்து மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பலபிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்ததுடன், கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற சிங்கள கிராமமான கலேபோகஸ்வெவ கிராம மக்கள் பல பிரச்சினைகளை முன்வைத்ததுடன் தாம் அனைவரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவதாக கூறி இணைந்துகொண்டனர்.

Read More

நாளாந்தம் கண்னீர் சிந்துகின்றேன் – அமைச்சர் அத்துக்கோரல

அஸ்ரப் ஏ சமத் நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவியேற்று அந்தக் கதிரையில் அமர்ந்தது முதல் இன்று வரை நான் நேரடியாக சந்தித்த மற்றும் அவதானித்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அல்லது அங்கு வாழுகின்ற, செல்ல இருக்கின்ற பணிப் பெண்களது அவல நிலைகளை கேட்டு, கேட்டு நான் எனது அமைச்சில் இருந்து கொண்டு நாளாந்தம் கண்னீர் சிந்துகின்றேன்.. ஆனால் எனது ஆசை அடுத்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தை இந்த நாட்டில் கொண்டாடமால் இருக்க வேண்டும்….

Read More

ஷீஆக்களின் ஊடுருவல் ;கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கை!!

எம்.ரீ.எம்.பாரிஸ் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் அதிகளவான முஸ்லிம் மக்கள் செரித்து வாழும் தொகுதியாகும் இங்கு அன்மைகாலமாக ஷீஆக்களின் ஊடுருவல் அதிவேகமாக பரவி வருகின்றது. என்பதனை அவதானிக்க முடிகின்றது. இதனை தடுத்து தூய்ய இஸ்லாத்தினை கூட்டல் குறைத்தல் இன்றி மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் கல்குடா தொகுதியின் அனைத்து தஃவா அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை கீழ் ஒன்றினைத்து தஃவா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் ஷீஆக்கள் பற்றிய…

Read More

வவுனியா மாவட்ட கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவின் அழைப்பின் பேரில் அடமஸ்கட, கலுக்குன்னாமடம், நெடுங்குளம், அவரந்துலாவ,மருதமடு,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சரின்நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும்,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களும் இன்றைய விஜயத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள…

Read More

ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் சீனா­வுக்கு பய­ண­மா­கின்றார். சீன ஜனா­தி­ப­தியின் அழைப்­பை­யேற்று எதிர்­வரும் 25 ஆம் திகதி சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருப்­ப­துடன் சீன ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் சீனாவில் நடை­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்­டிலும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் சீன ஜனா­தி­பதி ஷி. ஜின்பின் உள்­ளிட்ட பல நாடு­களின் தலை­வர்கள்…

Read More