சீகிரிய ஓவியத்தில் மையினால் எழுதி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவிக்கு அழைப்பாணை
சீகிரியாவின புராதன சின்னங்களில் மையினால் எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கல்முனை மாணவியினை தம்புள்ளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அல் – பஹ்ரியா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த குறித்த மாணவியினை எதிர்வரும் புதன்கிழமை (25) ஆம் திகதி ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின்றி குறித்த பாடசாலையின் உயர் தர மாணவர்கள் கடந்த நவம்பர் 6ஆம் திகதி சீரியாவிற்கு சுற்றுலாவொன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, புராதன சின்னங்களை…
