Headlines

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறு மீளாய்வுக்கான இறுதித் திகதி ஏப்ரல் 24

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் பெறுபேறு பட்டியலுடன் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் பரீ்ட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

ஆதரவற்ற சிறுமி துஷ்பிரயோகம்: தலைமறைவானார் மத போதகர்

தாய், தந்தையரை இழந்து சபை ஒன்றின் பாதுகாப்பில் வளர்ந்த சிறுமி ஒருத்தியைச் சபையின் மதபோதகர் சில ஆண்டுகளாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இதுகுறித்துப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதையடுத்து குறித்த பாதிரியார் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது. சிறுமிக்கு ஒரு இளைய சகோரனும் உண்டு. பெற்றோர் இல்லை. அதனால் சிறுமி இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கிருந்து சிறுமியை மருத்துவர் ஒருவரும் அவரது தாயும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். சகோதரனை வேறு…

Read More

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…!

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…! சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது வலது புறம் திரும்புபவர்கள் மட்டும் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினால் சிக்னலுக்கான கேமரா படம் பிடிக்காது. அவ்வாறு சில வினாடிகள் நிற்காமல் அப்படியே வலது புறம் திரும்பினால் கேமரா படம் பிடித்து அவராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இன்று முதல் வலது புறம் திரும்புவதாக இருந்தாலும் பச்சை விளக்கு…

Read More

(விபரங்கள் இணைப்பு) காது கேட்பதன் மூலம் வாய் பேச உதவுவீர்களா?

– ஏறாவூர் அபூ பயாஸ் –  அன்பின் சகோதரர்களே, ஏறாவூர்,மிச் நகரை சேர்ந்த காது கேட்காத,வாய் பேச முடியாதிருந்த நான்கு வயது சகோதரன் ரிப்தி ,உங்கள் மேலான உதவிகளைக்கொண்டு செய்யப்பட்ட 16-11-2013 அன்று செய்த சத்திர சிகிச்சை மூலம் “இன்று ஒரு குழந்தை எவ்வாறு தன் பேசும் திறனை வெளிப்படுத்துமோ அவ்வாறு இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்”. அல்ஹம்துலில்லாஹ். சகோதரன் ரிப்தியை பேச வைப்பதற்காக நீங்கள் எல்லாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. இதனால் கிடைக்கின்ற…

Read More

O Level Result.. கல்முனையில் இரு முஸ்லிம் பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் வரலாற்று சாதனை படைத்தனர்

– அஸ்ஹர் இப்றாஹிம் – அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 415 மாணவ மாணவிகள் க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளில் கல்வி கற்க தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் , அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளள்ளும் , அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இவ்விரு கல்லூரிகளிலுமிருந்து பெரும்…

Read More

மனைவியை மீட்டுத்தரும்படி கணவன், குழந்தை, வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தலுடன்..

சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Read More

ஜேர்மன் விமான விபத்து: துணை விமானியின் கடைசி வார்த்தைகள்…மலையில் மோதும் வரை திக் திக் நிமிடங்கள்

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் முதன்மை விமானியும், துணை விமானியும் பேசிக்கொண்ட உரையாடல்களை கருப்பு பெட்டியிலிருந்து அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில், முதன்மை விமானியான Patrick Sondenheimer(34) என்பவர் பயணிகளை நோக்கி பார்சிலோனாவிலிருந்து விமானம் 26 நிமிடங்கள் தாமதமாக கிளம்புவதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஆனால், டஸல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்திற்கு…

Read More

பிறந்த குழந்தைகளின் செவிப்புலனை பரிசோதிக்கும் இயந்திரம் அறிமுகம்!

இலங்கையில் பிறக்கும் சிசுக்களின் செவிப்புலன் நிலமையைப் பரீட்சிப்பது தொடர்பான முதலாவது இரண்டு நாள் செயலமர்வு  (30.03.2015) நேற்று  கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் ஆஸ்பத்திரியில் ஆரம்பமாகியது. இலங்கை நாட்டில் முதல் முறையாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக செவிப்புலன் பரீட்சிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயலமர்வின் இரண்டாம் நாளான இன்று (31ம் திகதி) முற்பகல் 11.00 மணிக்கு பிறந்த சிசுவின் செவிப்புலன் நிலமையைச் செயல் ரீதியாகப் பரீட்சிக்கும் நிகழ்வு பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

Read More

வடக்கு- கிழக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் மாற்றம்

வடக்கு- கிழக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புதிய ரயில்களை போக்குவரத்தில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read More

மத்­திய மாகாண சபை தவி­சா­ள­ருக்கு இரண்டரை வருட சிறைத்தண்­டனை

தேர்தல் வன்­முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணி­யா­ளர்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தமை மற்றும் ஆயு­தத்தைக் காட்டி அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்­டுள்ள மத்­திய மாகாண சபை தவி­சாளர் மஹிந்த அப­யக்­கோ­னுக்கு கண்டி மேல் நீதி­மன்றம் இரண்­டரை வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருந்­ததன் பேரில் ஆறு மாத கால சிறைத் தண்­ட­னையும் ஏனைய இரு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் தலா ஒரு­வ­ருடம் என்ற ரீதியில் இரண்­டரை வரு­டங்கள் சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. 2001…

Read More

‘எம்­மி­டமே பெரும்­பான்மை பலம் உள்­ளது பதவியை விட்டுக்கொடுக்க மாட்டோம்’

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெறு­வ­தற்­கான பெரும்­பான்மை பலம் எங்­க­ளி­டமே இருக்­கின்­றது. எனவே, எதிர்­வரும் ஏழாம் திகதி சபா­நா­யகர் வெளி­யிடும் அறி­விப்­புக்­காக நாங்கள் காத்­தி­ருக்­கின்றோம் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். பெரும்­பான்மை பல­மில்­லாத ஒரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சபா­நா­யகர் அறி­விக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய…

Read More

ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம்

கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளா் பிரிவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலகங்களின் கேட்போர் கூடத்தில் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கோறளைப்பற்று பிரதேச செயலாளா் எம்.எம்.நௌபா், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளா் திருமதி நிஹாரா மௌஜூத்,பிரதேச சபை தவிசாளா் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளா் ஏ.எம்.நௌபா், செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரிகளான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத்…

Read More