Headlines

ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் 18 இல் உதயமாகும் : மனோ கணேசன்

பிரிவினைவாதம், இனவாதம், மதவாதம் என்பவற்றை வீழ்த்தி உண்மையான ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், ஆச்சரியத்தை நோக்கிய அந்த பயணத்தில் தாமும் இணைந்து கொண்டமை பெருமைக்குரிய விடயம் என்றும்…

Read More

கட்சிகளின் செயலர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு

தேர்தலில் போட்டியிடும் அரசியல்  கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு மாத்திரம் பொலிஸ்  பாதுகாப்பு வழங்குவதற்கு  தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்கள் மற்றும்  குழுக்களின்  தலைவர்களைத் தவிர்த்து  ஏனைய வேட்பாளர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க இயலாதெனத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். யாரேனும் வேட்பாளருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமானால் அதுபற்றி தேர்தல் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலாளர்களுக்குத தெரியப்படுத்தியுள்ளார். இதற்கமைய கட்சிச் செயலாளர் மற்றும்…

Read More

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி

மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோள்ளை கண்டுபிடித்துள்ளது….

Read More

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் குறித்த ஏழு பேரையும் தமிழக அரசாங்கம் விடுவிக்க உத்தரவிட்டது. எனினும் இதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நிறுவப்பட்ட அரசியல் சாசன நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம்…

Read More

நவாஸ் ஷெரீபை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமா

ராணுவ பலத்தை அதிகரிப்பதை விட்டு, இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருவதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு வருகை தர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, அக்டோபர்…

Read More

குருநாகல் முஸ்லிம்களின் ஒற்றுமை இந்த தேர்தல் முடிவில் வெளிப்படும் – சாபி

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர். இவர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவ பத்திரிகைக்கு வழங்கி செவ்வி நேர்காணல் இக்பால் அலி நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன? நான் ஒரு வைத்திய அதிகாரியாக இருந்து சேவைகள் ஆற்றி வந்துள்ளேன் என்பவற்றுக்கப்பால் அதிகளவு சமூக…

Read More

பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் – ரணில்

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹா­ர­மகா தேவி பூங்­காவில் வெளியிடப்பட்டது. (முழு விபரம்) ஐந்து முக்கிய வேலைத்திட்டங்களை கொண்டதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமது பொரு­ளா­தாரக் கொள்கை அனை­வ­ரையும் செல்­வந்­தர்­க­ளாக்கும் கொள்­கை­யாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொரு­ளா­தா­ரம் எமது ஆட்சியில் 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும். ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை மீளப் பெற்­றுக்­கொள்வோம். தெற்­கா­சிய…

Read More

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் பூர்த்தி

பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார். இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான…

Read More

அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!

– அப்துல் அஸீஸ் ​- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் சனி,…

Read More

பதுளையில் முஸ்லிம் வியாபாரி வெட்டிக்கொலை

பதுளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முஹமட் ரொசான்  என்பவர் (வயது – 45) கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நகரில் வீதி வியாபரத்தில் ஈடுபடும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இக் கொலை தொடர்பில் பொலிசார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

ISIS பற்றிய இலங்கை முஸ்லிம்களின் கூட்டுப் பிரகடனம்!

– அஸ்ரப் ஏ சமத் – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகவியலாளர் மாநாடு ஐ.எஸ் பற்றிய இலங்கை முஸ்லீம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது. மேற்படி விடயமாக நேற்று மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஸ் ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது. இங்கு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் – 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலமா சபை இன்றும் ஒரு கட்டுக்கோப்பின்…

Read More

நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “60 மாதங்களில் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஐந்து திட்டங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல்…

Read More