Headlines

வெலே சுதாவின் சகோதரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரியை எதிர்வரும் 23  ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை

ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார். நேற்று கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்ட்டர், உக்ரைனை ஆக்ரமித்தது, சிரியாவிற்கு படைகளை அனுப்பியது என ரஷ்யா உலகை நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் “ரஷ்யாவுடன் பனிப்போரையோ அல்லது நேரடி போரையோ அமெரிக்கா விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை எதிரியாக மாற்ற விரும்பவில்லை. அதேசமயம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும்…

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…

Read More

மைத்திரியிடம் ஆலேசனை கேட்ட தாய்லாந்து பிரதமர்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More

இஸ்லாத்தை அவமதித்த ஞானசாரக்கு எதிராக வழக்கு

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் புனித பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும் 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த அவதூறான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிஸார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை…

Read More

எனது ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000!- சந்திரிக்கா

தான் முதல் பெற்ற ஓய்வூதியப் பணம் ரூபாய் 25,000- என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த ஓய்வூதிய தொகையாக 25,000 ரூபாயையே பெற்று வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சம்பளப் பணமாக ரூபாய் 25.000த்தை தான் முதன்முதலில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டதாகவும், அத்தொகையில் எவ்வித அதிகரிப்பும் 2005 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர்களின்…

Read More

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More

கம்மன்பிலவின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் இன்று விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஒரு தாயின் கண்ணீர்

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நூரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏட்பாடு செய்யுமாறு…

Read More