அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…
