Headlines

போலி ஜின் வைத்தியர்களுக்கு பதிலடி! (video)

வசந்தம் TV யில் நேற்றிரவு நடைபெற்ற முகமூடி நிகழ்சியில் பிரபல உளவியல் நிபுணர் மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி அவர்கள் கலந்துகொண்ட  நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் மக்களை ஏமாற்றும் போலி மந்திரவாதிகளின் வித்தைகள், ஜின் வைத்தியம் என்று ஊரை ஏமாற்றும் போலி தந்திரவாதிகளின் தந்திரங்கள் என்பன உடைத்துக் காட்டப்பட்டது.

Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கட்டணம் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரச்சார நோக்கத்திற்காக பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக 1425 லட்ச ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. புதிய ஒருவர் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதனால் வழக்கு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கட்டணத்தை அறவீடு செய்வது குறித்து வழக்குத் தொடர முன்னதாக முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும்…

Read More

அமைச்சர்களின் பொறுப்புக்கள் இன்று வர்த்தமானியில் வெளியாகும்!

இலங்கையின் அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. இதன்படி புதிய அமைச்சுக்கள் அதன் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். இதேவேளை 19வது திருத்தத்துக்கு அப்பால் நாடாமன்ற அங்கீகாரத்துக்கு அமைய இன்னும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களும் மூன்று பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More