Headlines

மக்கா விபத்தில் இலங்கையர்கள் எவரும் சிக்கவில்லை

மக்கா ஹரத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் காற்றின் காரணமாகவும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு அருகில் (நிர்மாணப்பணிகள் செய்யும்) கிறேன் ஒன்று உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் நூறு  பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ள நிலையில் .. உயிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் எவரும் இல்லை என முஸ்லிம் விவகார  அமைச்சர் ஹலீம் அவர்களின் அந்தரங்க செயலாளார் பாஹிம் ஹாசிம் அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார்.

Read More

மக்காவில் அனர்த்தம் – இலங்கை ஹாஜிகள் தொடர்பில், விபரங்களை பெற நடவடிக்கை

– இக்பால் அலி  – மக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான நிலவரங்களை உடன் பெற்றுத் தருமாறு இலங்கை சவூதி அரேபியாத் தூவராலயத்திலுள்ள உதவித் தூதுவர் அன்சார் அவர்களிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தொலைபேசியில் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது இருவருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து சென்ற ஹஜ்ஜாஜிகள் தொடர்பான விபரங்களை உடன் பெற்றுத் தருவதற்கு…

Read More

பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்வு… ஹரமில் மூன்று அடி உயரத்துக்கு தண்ணீர் (photos)

மக்கா, மஸ்ஜிதுல் ஹரம் பகுதியில் கிரேன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை  87 ஆக உயர்ந்துள்ளதாகவும்   காயமடைந்தோர் தொகை 183 ஆக உயர்வடைந்துள்ளதாக சவுதி அரேபிய  சிவில் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி நேரப்படி மாலை 5.45pm மணிக்கு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கையை சேர்ந்த ஹாஜிகள் பற்றி அறிவதற்காக முஸ்லிம் சமய விவாகார மற்றும் தபால் அமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் தற்போது ஜித்தா இலங்கை தூதுவர் காரியலத்துடனும் தற்போது அங்கு இருக்கும் …

Read More

இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில்,வர்த்தகம்,விசாயம்,மருந்தகம்,கட்டிட நிர்மாணிப்பு,ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம்,சக்தி வளத்துறை சார்ந்த…

Read More