Headlines

‘புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்’

2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்  அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர்  புலிகளுக்கு கப்பமாக  செலுத்தினார்’ என்றார். tm

Read More

என்ன செய்ய நினைக்கிறார் ஒபாமா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்னும் மீதமிருக்கும் இந்த 18 மாதங்களில் நீங்கள் முக்கியமாக என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று கேட்கப்பட்டதிற்கு ஒபாமா ”இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்க செய்வது தான் என் முக்கிய…

Read More

மனித நேயத்துக்கு புதிய இலக்கணம் படைத்த சவூதி விமானம்

– மௌலவி செய்யது அலி ஃபைஜி – இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சி நகரிலிருந்து சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவூதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்ட சவூதி விமானம். இதில் பயணித்தவர்களில் பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்க பட்டது. இது விமானிக்கு சொல்லப் படவே தனது விமனத்தின்…

Read More

ஆட்சியை கைப்பற்றுவோம் : ஞானசார தேரர் முழக்கம்

பொதுத் தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் பெயரை மாற்றுவோம்.சிங்கள மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம்.என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும்,வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் தலைவர் மற்றும்  கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்குச் சிங்கள மக்களின் உரிமை குறித்து கவலைகள் இல்லை….

Read More

சீன அரசின் எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷன் ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம்தான் அது. மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் மஸ்ஜிதை சுற்றியுள்ள வீதிகள் எங்கும் தொழுகை விரிப்புகளே காட்சி தந்தன. இஸ்லாத்ததை அடக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு இறை இல்லத்தில் இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமியது சீன…

Read More

மஹிந்தவை தோற்கடிப்போம் : சம்பிக்க

(நேர்காணல் : ஆர்.யசி) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தோம். அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியில் பலமான அரசாங்கத்தை அமைப்போம். நல்லாட்சியை தக்கவைத்து நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமது இலக்காகும். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட தலைவர். அவரை நம்பி மீண்டும் களத்தில் இறங்குவது முட்டாள் தனமான செயலாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேசரிக்கு…

Read More

கையால் எழுதப்பட்ட உலகின் பழம்பெரும் குர்ஆன் கண்டுபிடிப்பு

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘ரேடியோகார்பன்’ பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.

Read More

ரசூலுல்லாஹ்வை கேலி செய்யும் விதத்தில் எதையும் வெளியிட மாட்டோம் – சார்லி ஹெப்டோ பகிரங்க அறிவிப்பு!

– சையது அலி பைஜி – சார்லி ஹெப்டோ என்ற பிரான்சை சார்ந்த கேலி சித்திர பத்திரிகை கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மிக பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கியது. ஆம், முஸ்லிம்கள் உயிருக்கு உயிராய் மதிக்கும் நபிகள் நாயகத்தை பல்வேறு கால கட்டங்களில் கேலி சித்திரமாக வரைந்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடியது. இப்படி முஸ்லிம்களை விமர்ச்சிப்பதையும் நபிகள் நாயகத்தின் ’கேலி சித்திரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை வெறுப்பு ஏற்றுவதையுமே தொழிலாக கொண்டிருந்து சார்லி ஹெப்டோ தற்போது இனிவரும் காலங்களில் நபிகள்…

Read More

பிரபல கால் பந்து நட்சத்திரம் இமானுவேல் இஸ்லாத்தில் இணைந்தார்

உலகின் மிக சிறந்த கால் பந்து நட்ச்சத்திங்களில் ஒருவர் இமானுவேல். இவர் நைஜிரியாவை சார்ந்தவர். 2008 ஆம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தின் மிக சிறந்த கால் பந்து நட்சதிமாக தேர்வு செய்ய பட்டவர் அவர் 2000 மாவது ஆண்டில் இருந்தே சர்வதேச கால் பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 63 சர்வதேச போட்டிகளில் கலந்து 29 கோல்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார் அண்மை காலங்களில் அவரது சிந்தனை இஸ்லாத்தை நோக்கி திரும்பியது இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்த…

Read More

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் சபாநாயகரின் பணிப்பில் கோப் உபகுழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்கும் முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டவிரோத செயல் என்றும் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மனு தாக்கல் செய்திருந்தார். அந்த…

Read More