Headlines

இஷாவிலிருந்து விடியும் வரை கஃபாவில் இறைவனை வணங்கும் 80 வயதுமுதியவர்!

சையதுஅலி பைஜி நீங்கள் படத்தில் பார்க்கும் முதியவர் ரஷ்யா, செசன்யாவை சார்ந்தவர். தற்போது உம்ராவிற்காக மக்கா சென்றிருக்கும் இவர் . 80 வயதை கடந்த கூன் விழுந்த வயோதிபர். அவர் மக்காவின் மண்ணை மிதித்த நாளிலிருந்து தினமும் இஷா தொழுகையில் இருந்து பஜ்ர் தொழுகை வரையிலும் ஓய்வின்றி உறக்கமின்றி இறைவனை நின்று வணங்கி கொண்டிருக்கிறார். இவரின் செயல் காண்போரை கவர்ந்து வருகிறது. இவரின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் இவரை பொருந்திக் கொள்வானாக!

Read More

நடமாடும் இறை இல்லம்!

சையதுஅலி பைஜி இந்தோனிஷியாவை சார்ந்த முஹம்மது சோப்ரீன் என்பவர் நடமாடும் இறை இல்லத்தை தோற்றுவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது. “கடந்த ரமழானில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு பெரிய சந்தைக்குள் நான் நின்று கொண்டிருந்தேன் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதும், ஒரு இடத்தில் அமர்ந்து நோன்பு திறந்து விட்டு மஃரிப் தொழுகைக்கா மஸ்ஜிதை தேடிய போது எனக்கு அருகில் எந்த மஸ்ஜிதும் தென்படவில்லை அப்போதுதான், இதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டை செய்வதின் அவசியத்தை நான் உணர்ந்தேன் மக்கள் அதிகம்…

Read More

மக்காவில் இரவு தொழுகையில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர்!

புனித ரமழானில் நேற்றைய  இரவு தொழுகையை  சிறப்பிக்கும் விதமாக சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் பங்கெடுத்தனர். நள்ளிரவில் நடைபெற்ற க்யாமுல் லைல் தொழுகையில் முஸ்லிம்கள் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர். ரமழான் தொடக்கத்திலிருந்தே உலகின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் உம்ராவிற்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே ரமழானை முன்னிட்டு மக்கா மற்றும் மதீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சவூதி அரசு செய்துள்ளது.

Read More

மன்மோகன் சிங் பாதுகாவலர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட பெண்!

இந்திய, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களையே அனுமதிக்க முடியும் என அவர் கூறி…

Read More

யால சரணாலயத்தில் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை

யால தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யால சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிறுத்தை மற்றும் ஏனைய மிருகங்களை கண்டவுடன் ஏனைய வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்துகின்றனர். இவ்வாறு அறிப்படுத்தியதும் விலங்குகள் இருக்கும் இடத்தை நோக்கி ஏனைய வாகனங்கள் வேகமாக வருகின்ற போது சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன. எனவே இதன் காரணமாக யால சரணாலயத்தினுள் செல்லும் பயணிகள் கையடக்கத் தொலைபேசிகளை பாவிப்பதற்கு தடை…

Read More

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படை தளபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிய கடற்படை தளபதி ரவீந்திர குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 20 ஆவது கடற்படை தளபதியாக பதவியேற்ற ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு ஜனாதிபதியினால் நினைவுப் பரிசொன்றும் இச்சந்திப்பின்போது வழங்கிவைக்கப்பட்டது.

Read More

நான் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டவன்: மஹிந்த

முஸ்­லிம்­களின் நலனில் என்றும் அக்­கறை கொண்­டவன் நான். முஸ்­லிம்கள் நீங்கள் இந்த புனித ரம­ழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்­த­னை­களை இறைவன் அங்­கீ­க­ரிக்­கிறான். நோன்பு பிரி­வினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்­ப­வை­களை உங்­க­ளி­லி­ருந்தும் அகற்­றி­வி­டு­கி­றது. முஸ்­லிம்கள் நீங்கள் துவேசம், குரோ­த­மற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்கு நிச்­சயம் உதவி செய்­வீர்கள் என நம்­பு­கிறேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பொதுத் தேர்­தலில் ஐ.ம.சு.கூட்­ட­மைப்பில் குரு­நாகல் மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னுவை தாக்கல் செய்­வ­து­விட்டு அவர் குரு­நாகல்…

Read More

மஹிந்தவுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் எதிர்காலமொன்று இல்லை என்பதனால் ‘ராஜபக்ஷ’ என்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் டில்வின் சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வாக்கு கோருவதற்கு உறுதியான ஒரு பிரதேசத்தை தெரிவு செய்து கொள்ள முடியாத ஒரு அரசியல்வாதி பற்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர்…

Read More

நோன்புப் பெருநாள் பிறை பார்த்தல், தொடர்பான அறிவித்தல்

கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை பிரதி மாதமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி தலைப்பிறையைத் தீர்மானித்து வருகின்றன. அவ்வகையில் எதிர்வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக ரமழான் 29 ஆம் நாள் (2015.07.17 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை மாலை சனியிரவு அவ்வமைப்புக்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடவுள்ளன. ஜம்இய்யாவின் மாவட்ட , பிரதேசக் கிளைகள் தங்களது கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் அன்றைய நாள் பிறை பார்க்கும்…

Read More

வன்னியில் 3 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெறுவோம் – றிஷாத்  பதியுதீன்

எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில் நாம் புதிய அரசியல் காலாசாரத்தை தோற்றுவித்து செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் சில அரசியல் வாதிகள் அந்த கலாசாரத்தை அகற்ற முனகைின்றனர்.அது அவர்களது கனவு என்பதை சொல்லிக்கொள்ள…

Read More

பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்க மாட்டார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர் அனைத்து மக்களின் ஜனாதிபதி என்பதால் பிரசாரப் பணிகளில் பங்கெடுக்கமாட்டார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று  நள்ளிரவு 12.00 மணியுடன் பூர்த்தியடையும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர்  மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நேரடியாகவோ தபால் மூலமாக கிடைக்கப் பெறும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More