Headlines

1 இலட்சம் ருபாவே செலவழித்து முதன் முதலில் பாராளுமன்றம் சென்றேன் – மைத்திரி

அஸ்ரப் ஏ சமத் விசேட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பத்திரமே இருக்கும். அது 20வது தேர்தல் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டவையாகும். இன்று  எனது தலைமையில் எவ்வாறேனும் அப் பத்திரத்திரத்தை அனுமதிப்பதாகும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதியான 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அத் சீர்சிருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை தமது கையை உயர்த்தி அனுமதித்தல் வேண்டும். என இன்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி கொழும்பு சம்மேளத்தில்…

Read More

காரைதீவில் சிறுவர் ஊடக மாநாடு

எம்.எம்.ஜபீர் சர்வேதேச சிறுவர் தொழிலுக்கெதிராக தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில்  அம்பாரை மாவட்ட மூவீன சிறுவர்கள் கலந்து கொள்ளும் சிறுவர் ஊடக மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (10) 2.00 மணிக்கு காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ‘தற்காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மூவின சிறுவர்களும் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு அறியப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. அம்பாரை மாவட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் சீ.சிறிகாந் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஒய்வு பெற்ற…

Read More

“பொதுபல சேனா சூழ்ச்சி மிக்கதென மஹிந்த ராஜபக்ச, தற்போது புரிந்து கொண்டுள்ளார்”

பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கியது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சித்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு இந்நாட்டு முஸ்ஸிம் மக்களை அழுத்தத்திகுற்படுத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமைக்கு காரணம் பொதுபல சேனா எனவும், வட மாகாணத்தினுள் கோத்தபாய ராஜபக்ச…

Read More

தவளைகளின் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் – சோபித தேரர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒர் சந்தைப் பண்டமாக மாறியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் அதனை விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவளைகள் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவுவதனைப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களும் தாவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மிருகங்களுடன் பணியாற்றுவதற்கு வனவிலங்கு…

Read More

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் – றிஷாத் பதியுதீன்

ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் கிராமத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்த…

Read More

நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை

வித்தியாவின்  படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி  பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன்  அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும்  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்…

Read More

சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாயம்!

உலகப் புகழ்பெற்றதும் யுனெஸ்கோவினால் உலகின் வரலாற்று பாரம்பரியங்களுள் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்டதுமான இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாய நிலையில் இருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருளியல் திணைக்களத்தினால் இந்த ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதனாலேயே இந்த அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது. சிகிரியாவில் பல ஓவியங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் தற்போது 22 ஓவியங்களே இருக்கின்றன. இவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன. இலங்கையின் முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும்…

Read More

ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு -அமைச்சர் றிஷாத் விஜயம்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். நீ்ண்ட காலமாக இயங்காமல் உள்ள இந்த ஒட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைக்கும் வகையில் தேவையான புனரமைப்பு மற்றும் இயந்திர கொள்வனவுகளுக்காக 20 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,இரண்டாம் கட்ட நிதியாக 100 மில்லியன் ரூபாய்களை அடுத்த ஆண்டில் ஒதுக்கீடு செய்வதாகவும்,இதன்…

Read More

‘வடக்கு முஸ்லிம்கள்: வாக்களிப்பதற்கு மட்டும்தானா?’ (கட்டுரை)

ரஸீன் ரஸ்மின் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்…

Read More

மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுக்க கையெழுத்து வேட்டைக்கு துணைபுரிய வேண்டுகோள்….!

ரஸீன் ரஸ்மின் வுன்னி முஸ்லிம்களின கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும், மன்னார் மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுப்பதற்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை துணையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையில் வாழும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது ஒப்பங்களையும் இட்டு அந்த மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் யுத்த…

Read More

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக, உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹு, இல, 40 பஹல கொறகோய, நாவாலபிட்டியை சேர்ந்த M. C. M. Rinoos வயது 30 என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்படி கண்டி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர். இச் சத்திர சிகிச்சைக்காக சுமார் ரூபா 22 இலட்சம் செலவாகும் படி வைத்திய நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இப் பாரிய தொகையினை சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களால் திரட்ட…

Read More

சவூதி மன்னர் சல்மானின் ஆட்சியைக் கண்டு அஞ்சும் உலக ஏகாதிபத்திய நாடுகள்!

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்துபல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரானபோரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல்தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தைநிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறுசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏமன் போரில் அமெரிக்காவைகழட்டி விட்ட சவூதி அரேபியாவை குளிரவைக்க சவூதி மன்னர் சல்மான்அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவின் அழைப்பையும்சல்மான் ரத்து செய்த பிறகே இரண்டு குண்டுவெடிப்பு நடைபெற்றது. இறைவனின் அருளால் கடந்த ஐந்து நாட்களுக்கு…

Read More