2 குழந்தைகளுடன் கடத்தல்காரனிடம் சிக்கிய நிலையில் பீட்சா ஆர்டர் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பிய தாய்
முன்னாள் நண்பனால் கத்திமுனையில் பிடிபட்ட நிலையில் தன்னையும், தனது 2 குழந்தைகளும் அறிவு சாதுர்யத்தால் ஒரு பெண் காப்பாற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஹைலேண்ட்ஸ் கவுண்ட்டியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவரது முன்னாள் நண்பன், கத்தி முனையில் அந்தப் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் சிறைபிடித்து, கடத்திச் செல்ல முயற்சித்தான். அவனிடம் இருந்து தப்பிக்க சாதுர்யமாக திட்டம் தீட்டிய அந்தப் பெண், ‘குழந்தைகள் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு…
