Headlines

கெஹலிய உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை….!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை உற்பட மூவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றுக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தனத்துக்கு கொள்ளவனவு செய்யப்பட்ட பைப் வகை ஒன்றில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஊழல் மோசடி பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் பேரில் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலபிட்டிய இன்று இவ் அழைப்பாணையைப் பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் தவிர அப்போது இருந்த ரூபவாகினி கூட்டுத்தாபன தலைவர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோர் எதிர்வரும் 20 ஆம்…

Read More

நாளை பாராளுமன்றம் கலைக்கப்படுமா? நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால நாட்டு மக்களுடன் உரையாடுகிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (23) இரவு 9.00 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,ஔிபரப்பு செய்யப்படவுள்ளது.

Read More

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைத்தால் எந்தவொரு இலங்கை பிரஜையும் செல்ல கடமைப்பட்டுள்ளனர்

பிரதி வெளிவிவகார அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – இலங்கையிலுள்ள பௌத்த குருமார்கள்- கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட அனைத்து மத போதகர்கள் உட்பட…

Read More

பாராளுமன்றை கலைத்து தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும்,…

Read More

பம்பலப்பிட்டி பெண் கொலை: இருவர் கைது

பம்பலபிட்டி சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய 44 வயதான பெண் ஊழியரின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மேற்படி பாடசாலையின் காவலாளி எனவும் மற்றையவர் பாடசாலைக்கு வந்து செல்பவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். பாடசாலையின் களஞ்சிய அறையிலிந்து அந்த பெண்ணின் சடலம் ஏப்ரல் 19ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!

யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று…

Read More

ஜித்தா -மக்கா -மதினா புனித நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் Haramain எக்ஸ்பிரஸ் தயார் நிலையில் உள்ளது!

அதிவேக ரயில் ஜித்தா மூலம் மக்கா மதீனா இணைக்கும் மற்றும் மதீனாவிற்க்கும் Rabigh சென்றடைகிறது. “ஒத்திகை 300 கி.மீ. ஒரு மணி நேரம் அடையும் ஒரு வேகத்தில் கோடை வரை தொடரும்,” சவுதி ரயில்வே அமைப்பு (SRO:) முகம்மது அல்-Suwaiket தலைவர் கூறினார். அவர் முதல் ரயில் ஏற்கனவே இரண்டு ஓடிவரும், 417 பயணிகள் மற்றும் ஒரு pantry கார் வரை இணங்கிப் 13 வண்டிகள் கொண்ட இராச்சியம் வந்து கூறினார். “இந்த ராஜ்ய வரலாற்றில் மிகப்பெரிய…

Read More

துபையில் டிராபிக் விதிகளை மீறாத 2 டிரைவர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசளித்த துபாய் போலீஸ்.!

துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ். போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள்…

Read More

பாலைவன நிலத்தில் கிடைத்த வெற்றி… கத்தார் தலைநகர் தோஹாவில் நெல் அறுவடைக்குத் தயார்.

அபூ சுமைய்யா கேரள விவசாய ஆர்வலர்களால் Al Dosari Park shahaniya வில் சிறிய நிலப் பரப்பில் முதலாவதாக செய்யப் பட்ட நெற் பயிர் செய்கை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெற் பயிர் செய்கை நீர் வளமுள்ள நிலத்திலே (water rich soil ) செய்கை பண்ணப் படுவது வழக்கம் இவர்கள் பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக நெற் பயிர் செய்து வெற்றி கண்டிருகின்றார்கள்.

Read More

12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கு கப்பலில் அடைக்கலம் தருகிறது கட்டார்

வரும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்த கத்தார் அரசு ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக மிதக்கும் ஓட்டல்களை அமைக்க பலரும் ஐடியா கொடுத்த போது முதலில் அதை நிராகரித்து விட்ட கத்தார் அரசு இப்போது மீண்டும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, போட்டியை காணவரும் 12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கும் மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களில் அடைக்கலம் அளிக்க…

Read More

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதன்

விசித்திரங்களின் தாய் நாடான அமெரிக்காவில் மற்றுமொரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலரடோ மாநிலத்தில் கைதுப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதனை(?) போலீசார் பிடித்து வைத்துள்ளனர். கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையால் ‘கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த திங்கள் அன்று கொலரடோ நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லூகாஸ்(37) என்ற நபரைப் பிடித்து…

Read More

புள்ளிவிபரத்திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு!

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே  புள்ளி விபரத் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் புள்ளி விபரத்  திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் …

Read More