Headlines

ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் இங்கிலாந்து மாணவர்கள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து உள்ளதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 9 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிரியா சென்று ஐ.எஸ். நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதுக்கு உட்பட்ட இந்த மாணவர்களில் 4 பேர்…

Read More

ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை: நொறுக்கபட்டது வேன்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் உள்ள ஒந்தாச்சிமடம் சந்தியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி வேன் பிரதேச மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த தங்க ஆபரண தொழில் செய்யும் இரு பிள்ளைகளிக் தந்தையான சின்னத்தம்பி கமலசேகரம் வயது (42) என்பவரே உயிரிழந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் ஊர் வீதியிலிருந்து…

Read More

தாத்தா வீட்டில் கொடுமை: வழி தவறி வந்த சிறுமி

– க.கிஷாந்தன் – அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் வைத்து வழி தவறி வந்த 12 வயதுடைய சிறுமியை மீட்ட தோட்ட மக்கள், அவரை அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி பகுதியைச் சேர்ந்த ஆர்.சிறிதேவி என்ற சிறுமியே  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இன்ஜெஸ்ட்ரி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி, வெளிஓயாவில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். தாத்தாவின் வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகவும் அங்கு தனக்கு சிரமமான வேலைகளை வழங்குவதாகவும் அதன் காரணமாகவே தாத்தாவின்…

Read More

நான்கு வகைகளிலான கறிகளுடன் இன்றுமுதல் 50 ரூபாவிற்கு விற்கப்படும் சோற்றுப் பர்சல்கள்

நான்கு வகைகளிலான கறிகளுடன் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று முதல் முதல் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக கொழும்பு நகரில் 15000 சோற்றுப் பொதிகள் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. 50 ரூபாவிற்கு…

Read More

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் 5555

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கமானது இதுவரை இலங்கை வீதிகளில் பயணித்த வாகனங்களில் காணப்படாத அடையாளத்துடன் கூடிய இலக்கமாக அது அமைந்துள்ளது. வாகனத்தின் முன் பகுதியில் 5 நட்சத்திரங்களும் பின் பகுதியில் 5 நட்சத்திரங்களும் காணப்படுகின்றன. பீல்ட் மார்ஷல் ஒருவரின் வாகனம் செல்கிறது என்பதை ஏனையோர் அறிந்து கொள்ளும் வகையில் விசேட அடையாளமாக இந்த நட்சத்திரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. எஸ். 400 என்ற பென்ஸ் கார் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது ஐப்ரைட்…

Read More

முஹம்மது நபியை முன்னறிவிப்பு செய்த பைபிள் கண்டுபிடிப்பு

இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு கிறிஸ்து [ஈஸா நபி ] முன்னறிவிப்பு செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டு எடுக்கப்பட்டது. இறுதி தூதரான முஹம்மது நபியின் வருகையை குறித்தும் ,இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம் ,தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துகளுடன் முரண்படுவதால் கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது .என்று துருக்கியின் கலாச்சார சுற்றுலா துறை அமைச்சர் உர்துக் ரூல்குனாய் தெரிவித்தார்…

Read More

என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்..றியாஸ் நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார். மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையின் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில் – அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆ நடத்த முடியும்: கல்முனை நீதவான்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தனித்து ஜும்ஆவினை நடத்த முடியும் என கல்முனை நீதவான் இன்று உத்தரவிட்டார். ஜமாதின் நற்பிட்டிமுனை கிளையினால் நடத்தப்பட்டு வரும் ஜும்ஆ தொழுகையை நிறுத்தக் கோரி கல்முனை நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஜும்ஆ நடத்துவதற்க்கு யாருக்கும் தடை விதிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறியே இந்த மனுவினை நீதவான தள்ளுபடி செய்யதார். -தவ்ஹீத் ஜமாத் ஊடகப் பிரிவு-

Read More

கட்டார் மன்னர் நாளை இலங்கையை வந்தடைகிறார்

கட்டார்  மன்னர் தமீம் பின் ஹமத் ஆலு தானி இம்மாதம் 23ஆம் 25ஆம் திகதிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கபட்டு இருந்த அதேவேளை நாளை (24) இலங்கையை வந்தடைவார் என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன் நான்கு மணித்தியாலம் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிய வருகிறது. மேலும் இவரின் வருகைக்காக கொழும்பில் போக்குவரத்து முறைகளில் மாற்றங்களும் மேட்கொள்லப்பட உள்ளது. குறித்த விஜயத்தின் போது,…

Read More

போக்குவரத்து நாளை கட்டுப்படுத்தப்படும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு வரையிலான சில வீதிகளின் போக்குவரத்து நாளை கட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். பிற்பகல் 1.30 இருந்து 2.30 வரையும் 3.45 இருந்து 4.45 வரையும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவுமுறை இளைஞன் கைது

எட்­டு­வ­யது சிறு­மி­யைப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சொல்­லப்­படும் 25 வயது இளைஞன் ஒரு­வ­னைக்­கைது செய்­துள்­ள­தாக வண்­ணாத்­தி­வில்லு பொலிஸார் தெரி­வித்­தனர். வண்­ணாத்­தி­வில்லு பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கரை­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சிறுமி யின் தாயின் சகோ­தரி ஒரு­வ­ரு­டைய கண­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார். தான் தரும் பணத்தை தாயிடம் கொடுக்­கு­மாறு கூறி சிறு­மியை ஏமாற்றி சந்­தேக நபர் சிறு­மியை தனது வீட்­டுக்கு அழைத்து சென்றே இவ்­வாறு குற்றம் புரிந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தமது…

Read More

31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார்

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக…

Read More