Headlines

வவுனியா மாவட்ட கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவின் அழைப்பின் பேரில் அடமஸ்கட, கலுக்குன்னாமடம், நெடுங்குளம், அவரந்துலாவ,மருதமடு,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சரின்நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும்,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களும் இன்றைய விஜயத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள…

Read More

ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் சீனா­வுக்கு பய­ண­மா­கின்றார். சீன ஜனா­தி­ப­தியின் அழைப்­பை­யேற்று எதிர்­வரும் 25 ஆம் திகதி சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருப்­ப­துடன் சீன ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் சீனாவில் நடை­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்­டிலும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் சீன ஜனா­தி­பதி ஷி. ஜின்பின் உள்­ளிட்ட பல நாடு­களின் தலை­வர்கள்…

Read More

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக ஜெனரல் சரத் பொன்சேகா நாளை பதவியேற்கிறார்!

சுதந்திர இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். முப்படையின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒத்ததாக கருதப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட சகல உரிமைகளும் மீள வழங்கப்பட்டது. இதேவேளை, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட ஒருவரால் அரசியலில் ஈடுபடமுடியாது என மனித உரிமை ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி…

Read More

இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா

இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை. எனினும் குறித்த நாடுகளில், துறைமுக அபிவிருத்தி, எண்ணெய், எரிவாயு குழாய் கட்டுமானம், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட வர்த்தக உட்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் உள்ளன. தேசிய பாதுகாப்பு கரிசனைகள், மற்றும் வர்த்தக நலன்கள் தொடர்பான எல்லா முன்னேற்றங்கள் குறித்தும், இந்திய அரசாங்கம் நிரந்தமான கண்காணிப்பை…

Read More

மஹேலவுக்கும் சங்காவுக்கும் சச்சின் ருவிட்டரில் வாழ்த்து !

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றனர். ஓய்வு பெற்ற இருவருக்கும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டென்டுல்க்கரும் தனது வாழ்த்தினை இருவருக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சச்சின் தெரிவித்த வா​ழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பல வருடங்களாக ஒரு நாள்…

Read More

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரச வைத்தியகள் சங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபடப் போகின்றனர் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அரசிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து 8 வாரங்கள் கடந்த நிலையில் அவை எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த அரச வைத்திர்கள் சங்கம். எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து தாம்…

Read More

பண்டாரநாயக்க கொலையின் பின்னணி கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர இ​ளைஞர் முன்னணியின் புதிய அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு – 10 , டீ.பீ ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தமது கட்சியின் தலைவரைக் கொலை செய்யும் அளவிற்கு அரசியல் வீழ்ச்சியடைந்து சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு பண்டாரநாயக்க…

Read More

ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அயுப்காண் அமைச்சர் ராஜித நியமனம்

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த அயுப்காண் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹம்பந்தோட்டை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சாம் மஹ்ருபின் மகன் மஹ்ருபையும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார். இந் நிகழ்வு இன்று நரரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர் சோமலாப நிதிய அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில் திணைக்களத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியமே உப்புக் கூட்டுத்தாபனத்;தில்…

Read More

விலைக் குறைப்பு செய்யாத வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்

அரசாங்கம் மக்களுக்கு அறிவித்த பொருட்களுக்கான விலைக் குறைப்பு நுகர்வோர்களை சென்றடைவதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் உள்ள நுகரவோர் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான அலுவலகம் (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன்,நுகர்வோர் அதிகார…

Read More