இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து…