Headlines

இஸ்லாமுக்கு சேவையாற்றிய சொற்பொழிவாளர் ஜகிர் நாயக்குக்கு சிறப்புக்குரிய பரிசளித்து சவுதி மன்னர் கௌரவிப்பு

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார். மன்னர் ஃபைசல் சர்வதேச பரிசு என்ற பெயரில் இஸ்லாமிய சேவை, இஸ்லாமிய கல்வி, அரபுமொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், அறிவியல்…

Read More

இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்(EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது இதில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், பொருளாதார விடயங்கள் அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறார்களுக்கான கல்வி போன்றவைகளையும் அமைச்சர் விளக்கினார்.இதில் EDB தலைவர்.மற்றும் வர்த்தக பிரிவு தலைவரும் கலந்து கொண்டனர்..

Read More

பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்ற பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் கலந்துக்கொண்டுபோது

Read More

இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ள மலேசியா!(படங்கள்)

ஊடகப் பிரிவு இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது! சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது. இலங்கைக்கும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது. இந்த இரு தரப்பு உறவுகளும்; தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தெரிவித்தார். நேற்று…

Read More

கல்விக்காக ஏங்கும் சிறார்களுக்கான சிறுவர் முன்பள்ளி திறப்பு (படங்கள்)

ஊடகப் பிரிவு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹ்யான்,முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலையிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐநா மனித உரிமை பேரவையின் 28 கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தனது உரையை நிகழ்த்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைனுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளத என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி மார்ச் 6

க.பொ.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்திபெறாது உயர்தரம் தோற்றியுள்ள மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். க.பொ.த உயர் தரத்தில தோற்றுவதற்கு கணித பாட சித்தி கட்டாயமில்லை என்றாலும் தொழில் வாய்ப்பு- தொழிற்பயிற்சிகள்- கற்கை நெறிகள்- நிறுவனம் அல்லது வேறு தேவைகளுக்கு கணித பாடம் அவசியம் என்று கோரப்படும் பட்சத்தில் கணிதம் பாடச் சித்தி அவசியம் என்றும்…

Read More

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார். மேலும் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழகத்தி 3 புதிய விடுதிகளையும் விளையாட்டுத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

“ஜோதிடத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது ” – மஹிந்த ராஜபக்ஸ

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப. எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின்…

Read More

அமெரிக்க ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறிய பயங்கர பக்றீரியா

அமெரிக்க ஆய்வு கூடமொன்றிலிருந்து அதி பயங்கரமான , உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை பக்றீரியா வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Burkholderia pseudomallei’ என்றழைக்கப்படும் ஒரு வகை பக்றீரியாவே வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுலேன் தேசிய முதனிகள் ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் (Tulane National Primate Research Center) இருந்தே குறித்த பக்றீரியாவானது வெளியேறியுள்ளது. பக்றீரியா எவ்வாறு வெளியேறியது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதி உயர் பாதுகாப்பு கொண்ட குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் எவ்வாறு இச்சம்பவம் இடம்பெற்றது…

Read More

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம்: பிரதமர்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ‘மனுசத் மினுசுன் பலயய்- ரட சுரகின் மஹா பவுரய்’ என்ற தொனிப்பொருளில், பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (28), கட்சியை…

Read More