Headlines

மட்டக்களப்பில் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு

ன்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது. 1. 2015.01.27 – 9.00 – 17.00 – வக்கியல, பாலையடிவெட்டை, நெல்லிக்காடு, காக்காச்சிவெட்டை மற்றும் சின்னவத்தை 2. 2015.01.28 – 9.00 – 17.00 – ஓட்டமாவடி, ஹைய்ரத் வீதி, மக்களடி வீதி மற்றும் வாழைச்சேனை. 3….

Read More

மீண்டும் இயங்கும் பேஸ்புக்

ஆசிரியர் பீடம் சரியாக இலங்கை நேரப் படி பி.ப 12 மணி முதல் பி.ப 12:40 இற்கு மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எதற்காக பேஸ் புக் தடை பெற்றது என இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப் படவில்லை

Read More

அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்: ரணில் விக்ரமசிங்க

குரோதம் வன்முறைகளில்லாத புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் ஏற்படுத்த நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அனைத்துக்கட்சிகளினதும் ஒத்துழைப்பு இதில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவை மக்களால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு பொலனறுவை நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்…

Read More

நண்பர்கள் மூவரும் ஒரே விபத்தில் பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்….

எம்பிலிப்பிட்டிய-இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், மதிலில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1.05 க்கு இடம்பெற்ற இந்த விபத்தில், 19 வயதான இளைஞர்கள் இருவரும் 21 வயதான இளைஞனுமே பலியாகியுள்ளனர். எம்பிலிப்பிட்டியிலிருந்து இரத்தினபுரியை நோக்கி பயணித்துகொண்டிருந்த போதே கல்வங்கு எனுமிடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சவுதி அரேபியாவில் வபாத்தான கலாவெவ மாஹிர் இன் ஜனாஸா இன்று அங்கு அடக்கம் செய்யபடுகிறது

அஸ்ஸலாமு அலைக்கும் கலாவெவ பிரதேசத்தை சேர்ந்த மாஹிர் சவுதி அரேபியாவில் வபாத்தானது தொடர்பில் நாம் என்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 27/1/2015 செவ்வாய் கிழமை மாலை ஹப்ருல் பாத்தின் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

Read More

அக்கரைப்பற்று ஆலிம்நகர் ;14 வருடங்களாக மக்கள் பாவனைக்கு வழங்கப்படாமல் மூடப்பட்டிருக்கும் பல்கட்டிடம்

முகம்மட் இன்ஹாம் அக்கரைப்பற்று ஆலிம்நகர் (5ம்கட்டை) கிராமத்தில் UNDP நிறுவனத்தினால் பல இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பல்தேவைக்கட்டிடம் முறையாக ஆலிம்நகர் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்புச்செய்யப்படாமல் சுமார் 14வருடமாக இழுத்து மூடியிருப்பதன் மர்மம்தான் என்ன……….? அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான காரியாலயம், நடமாடும்சேவை, கிராமசேவையாளர் காரியாலயம், நலன் விரும்பிகளுக்கான மக்கள்சந்திப்பு இளைஞர்விவகாரம் தொடர்பான பயிற்சித்திட்டமென ஆலிம் நகரிலுள்ள மக்களின் பொதுவேலைகள் அனைத்தையும் ஒரு கூரையின் கீழ் கொண்டுவரப் பொருத்தமான கடிட்டிடம் இதுவாகும். இதுவரைக்கும் அவ்வாறான செயற்திட்டம் தொடராக ஸ்திரப்படுத்தப்படாததால்; இக்கட்டிடம் கட்டியதில்…

Read More

இலங்கை வரும் மோடி

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை வருவார் என இந்தியத் தூதரகத்தின் தகவல் ஊடகப்பிரிவுக்குப் பொறுப்பான முதற் செயலாளர் ஈஷா ஸ்ரீநிவட்சவா தெரிவித்துள்ளார். திகதிகளை இறுதிசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகைதரும் முதலாவது சந்தர்ப்பமாக நரேந்திர மோடியின் விஜயம் அமையவுள்ளது. மன்மோகன் சிங் 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக…

Read More

எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் தானே! சம்பிக்கவிடம் புலம்பிய மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு கிழமைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்போது தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார். எனினும் கோபமில்லாத தொணியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். எனினும் அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக…

Read More

தங்க நகை மோசடி விவகாரம்… என்னுடைய தாயார் மீது பொய்யான குற்றச்சாட்டடுக்களை சுமத்த வேண்டாம்.. நாமல்

தங்க நகைகளை மோசடியாக விற்பனை செய்ய முயன்றதாக தன்னுடைய தாயார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள நாமல் ராஜபக்‌ஷ, அரசியல் ரீதியாக வேண்டுமானால் என் மீதோ என்னுடைய தந்தையையோ தாக்குங்கள். என்னுடைய தாயாரை, குடும்பத்தினரை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கின்றார். “அரசியல் பழிவாங்கல்தான் உங்களுடைய நோக்கம் என்றால், என்னுடைய தந்தையை அல்லது என்னைத் தாக்குங்கள். என்னுடைய தாயார் மீதோ சகோதரர் மீதோ பொய்யான குற்றச்சாட்டடுக்களை சுமத்த வேண்டாம்” எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். முன்னாள் பிரதிப் பொலிஸ்…

Read More

வடக்கில் இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி!!!

வடக்கில் இனவாதத்தை தூண்டிவிட்டு மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ரிவி தெரணவில் நேற்று (26) இரவு ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், ´எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. அதனை நான் அமைச்சரவை விசாரணைக்கு வழங்கவுள்ளேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய…

Read More

உயர்தரத்துக்கு கணித பாட சித்தி கட்டாயம் – கல்வி அமைச்சு

உயர் தரக் கல்வியைத் தொடர்வதற்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணித பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அரசியல் தலையீடுகள் கடந்த அரசில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த காலங்களில் கணித பாடத்தில் 35 புள்ளிகள் சித்தியடையும் மட்டத்தை சுமார்…

Read More